தமிழகத்தில் ஆச்சர்யம் ஒன்றும் நிகழப்போவதில்லை திருநாவுக்கரசர்

Published:

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த குற்றாலத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்  திருநாவுக்கரசர் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தார் அப்போது செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது
இரட்டை இலை சின்னம் இ.பி.எஸ் – ஒ.பி.எஸ் அணிக்கு கிடைத்தது எதிர்பர்த்த ஒன்றுதான். இ.பி.எஸ் – ஒ.பி.எஸ் இடையே மனதளவில் ஒற்றுமை இல்லாவிட்டாலும்  ஜெயலலிதா மறைவிற்கு பின் மோடி, அமித்ஷா  ஆலோசனையின் பெயரிலேயே இ.பி.எஸ் – ஒ.பி.எஸ் அணி இணைந்துள்ளது. அப்போதே இந்த அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பது தெரியும். பெருபான்மையை வைத்துதான் தேர்தல் கமிஷன் முடிவு செய்யும். சில இடங்களில் பெருபான்மை இருந்தும் கொடுத்தும் இருந்திருக்கிறார்கள். கொடுக்காமலும் இருந்திருக்கிறர்கள்.
கடந்த ஒருவருட காலத்தில் நடைபெற்ற மிரட்டல், இ;.பி.எஸ் – ஒ.பி.எஸ் தரப்பினாpடையே நடைபெற்ற சோதனை, மற்றொரு தரப்பினரிடம் நடைபெற்ற சோதனை என்று நடைபெற்றதன் முடிவுவே இ.பி.எஸ் – ஒ.பி.எஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது.
தற்போது உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த அணியோடு கூட்டனி அமைக்க  பா.ஜ.க-வினர்  முயற்சிப்பார்கள். இரட்டை இலை பெற்ற இ.பி.எஸ் – ஒ.பி.எஸ் அணி இனி எவ்வாறு செயல்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு கட்சி பலவீனம் அடைந்துள்ளது. இந்த அரசு மக்களிடம் இருந்து விலகி சென்று விட்டது.
லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுவதால் அமைச்சர்களுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. இ.பி.எஸ் – ஒ.பி.எஸ் அணிக்கு இரட்டை இலை கிடைத்ததால் தமிழகத்தில் ஆச்சார்யம் ஒன்றும் நிகழப்போவதில்லை. மத்திய அரசின் நிர்பந்தத்தாலேயே இ.பி.எஸ் – ஒ.பி.எஸ் அணிகள் இணைந்தது. அவர்களுக்கு மன ஒற்றுமை ஏற்படவில்லை. பதவி, ஆட்சியை காப்பாற்றவே ஒன்றாக உள்ளனர் தமிழகத்தில் கந்து வட்டி கொடுமை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு நடப்பதுதான் அமைதி என்றால் முதல்வரின் பார்வையில் தமிழகம் அமைதியாகவே உள்ளது. என அவர் தெரிவித்தார்

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img