மதுரை… தேவர் சிலைக்கு மாலை அணிவித்த முதல்வர்!

சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
devar-statue-garland-cm
devar-statue-garland-cm

மதுரை கோரிப்பாளயத்தில் தேவர் ஜயந்தியை முன்னிட்டு, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர்கள் உதயக்குமார், செல்லூர் கே. ராஜூ ஆகியோர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலையணிவித்தார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரை கோரிப்பாளையம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முதல்வர் வருகையையொட்டி கட்சி பிரமுகர்கள் பூர்ண கும்ப மரியாதையுடன் கைகளில் பதாகைகள் ஏந்தி வரவேற்பளித்தனர்.
தமிழக முதல்வருடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் எம்.எல் ஏக்களும் மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு முதல்வர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின் முதல்வரும், அமைச்சர்களும் கமுதி பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த கிளம்பி சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.