அதிமுகவில் அணியும் கிடையாது பிணியும் கிடையாது: செல்லூர் ராஜு!

Published:

sellur-raju
sellur-raju

மதுரை: பேசினார்.

மதுரை மீனாட்சி மகளிர் கலைக்கல்லூரி பின்புறம் உள்ள பந்தல்குடி கால்வாயில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளரிடம் பேசிய அவர், செல்லூர் பந்தல்குடி வாய்க்காலில் இருந்து பெருமளவிலான கழிவுநீர் வைகை ஆற்றில் கலக்கிறது இதனை தவிர்க்கும் பொருட்டு இங்கே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உடன் இணைந்து செயல்படுத்தப்பட்டுள்ளது.

ALSO READ: ஆணித்தரமான அரசு அதிமுக.,! திமுக., எனில் நழுவிச் சென்றிருக்கும் : செல்லூர் ராஜு!

இங்கு ஆறு சுத்திகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தமான தண்ணீர் பூங்காக்கள் மற்றும் பல தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு மீதமுள்ள தண்ணீர் வைகை ஆற்றில் கலந்து விடப்படும். இரண்டு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த மையம் துவங்கப்பட்டுள்ளது. இதன் தொடர் பராமரிப்புக்காக மாநகராட்சியின் பொது நிதியில் இருந்து 65 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

மதுரை சுற்றி உள்ள 33 ஊரணிகளில் 13 தற்போது சீரமைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு வாய்ப்பாக அமையும். 16 ஊரணிகளில் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன

மேலும், 6 ஊரணிகளில் பணிகள் விரைவில் தொடங்கப்படும். மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் தல்லாகுளத்தி
லுள்ள திருமுக்குளம் டவுன்ஹால் ரோடு தெப்பக்குளம் ஆகியவை தற்போது மாநகராட்சியால் சீரமைக்கப்பட்டு வருகிறது.

ALSO READ: அதிமுக.,வில் உழைப்பவர்க்கே மரியாதை, பதவி தேடி வரும்: செல்லூர் ராஜு!

மதுரை மாநகருக்குள் மட்டும் தற்போது 412 ஆழ்குழாய் கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன அவை அனைத்தையும் மழைநீர் சேகரிப்புக்காக மாற்றம் செய்யப்பட மதுரை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுளுக்கும் தங்கு தடையின்றி குடிநீர் கிடைப்பதற்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

மேலும், அவர் கூறுகையில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு பணிகளை பாராட்ட மனமின்றி எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் தொடர்ந்து புகார் செய்து வருகிறார். நடைபெறுகின்ற பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியும்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

ALSO READ: ஸ்டாலினுக்கு விவசாயியாக நடிக்கக் கூட தெரியல: செல்லூர் ராஜு நக்கல்!

மதுரையை மட்டுமே எடுத்துக்காட்டாக கொண்டால் கடந்த 10 ஆண்டுகளில் மிக அபாரமான வளர்ச்சியை மதுரை பெற்றுள்ளது.
கரோனா பெருந்தொற்று காலத்திலும்கூட தமிழக அமைச்சர்கள் மக்கள் பணியை தொடர்ந்து ஆற்றி வந்தது எல்லோருக்கும் தெரியும்.

அதிமுகவை பொறுத்தவரை எந்த அணியும் கிடையாது அங்கு பிணியும் கிடையாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசி பெற்று ஆட்சியை மூன்றாவது முறையாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமையும். அதற்குரிய பணிகளை தொடர்ந்து அதிமுக செய்து வருகிறது என்றார்.

Related articles

Recent articles

spot_img