ரிபப்ளிக் டி.வி. தலைமை ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டதற்கு தேசிய சிந்தனைக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தேசிய சிந்தனைக் கழகம் (தமிழ்நாடு) மாநில அமைப்புச் செயலாளர் ம.கொ.சி.ராஜேந்திரன் இது குறித்து வெளியிட்ட அறிக்கை:
ரிபப்ளிக் டி.வி. செய்தி சேனலின் தலைமை ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான திரு. அர்ணாப் கோஸ்வாமி இன்று காலை (4.11.2020) மும்பை போலீஸால் அவரது வீட்டில் அடாவடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தேசிய சிந்தனைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரான இந்த நடவடிக்கையை தேசநலனில் அக்கறை உள்ள அனைவரும் கண்டிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
ரிபப்ளிக் டி.வி. மூலமாக, இந்திய விரோத சக்திகளை அம்பலப்படுத்தி வந்தவர் அர்ணாப் கோஸ்வாமி. அவரது சேனலுக்கு ஸ்டூடியோ அமைத்துக் கொடுத்த அரங்க அலங்கார நிபுணர் திரு. அன்வய் நாயக்கும் அவரது தாயும் 2018-இல் தற்கொலை செய்துகொண்டனர். அதற்கு, ரிபப்ளிக் டி.வி. நிறுவனம் தனக்குக் கொடுக்க வேண்டிய ரூ. 5.4 கோடி கட்டணத்தைக் கொடுக்காததே காரணம் என்று தற்கொலைக் குறிப்பு எழுதியிருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் அதனை விசாரித்த மும்பை போலீஸ் அந்தப் புகாரில் முகாந்திரமில்லை என்று வழக்கைக் கைவிட்டுவிட்டது. 2018-இல் அவர் மீதும் அவர் சார்ந்த நிறுவனம் மீதும் தொடுக்கப்பட்ட அந்தக் குற்ற வழக்கை மீண்டும் தூசுதட்டி, அவரை தற்போது மகாராஷ்டிர அரசு கைது செய்துள்ளது. இதற்கு அவர் மீதான தனிப்பட்ட பகையே காரணமாகும்.
ALSO READ: ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமி கைது – அடித்து இழுத்து சென்ற போலீசார்?
குறிப்பாக, இந்த ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தை அதிரச் செய்த இரு குற்ற நிகழ்வுகளை பெரிதுபடுத்தி ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தை ரிபப்ளிக் டி.வி. ஈர்த்தது. அதில் ஒன்று பால்கரில் நடைபெற்ற பால்கர் சாதுக்கள் படுகொலை (16.4.2020). சூரத்துக்கு காரில் சென்று கொண்டிருந்த இரு அப்பாவி இந்து துறவிகளை பால்கர் என்னுமிடத்தில் காவல் துறையினரின் கண்ணெதிரில் கும்பல் ஒன்று அடித்து கொலை செய்தது. அதற்கு எதிராக நியாயத்தின் குரலாக அர்ணாப் ஒலித்தார். அதனால் மகாராஷ்டிர அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது.
அதேபோல, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியாக நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட (14.6.2020) நிகழ்விலும், அதன் பின்னணியில் உள்ள அரசியல்வாதிகள், திரைப்படத் துறையினர், போதைப்பொருள் கும்பல் உள்ளிட்டோரை அம்பலப்படுத்தியது ரிபப்ளிக் டி.வி. இதனைக் கண்டித்த நடிகை கங்கனா ரணாவத் மகாராஷ்டிர அரசால் வேட்டையாடப்பட்டார்; அதையும் அர்ணாப் கடுமையாக விமர்சித்து வந்தார்.
மகாராஷ்டிர அரசுக்கு எதிராகவும் அம்மாநில போலிஸுக்கு எதிராகவும் தொடர்ந்து அச்சமின்று செய்திப் போரை நடத்திவந்ததால்தான், அர்ணாப் கோஸ்வாமி மீது தற்போது அம்மாநில அரசு ஜனநாயக விரோதமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டபோது சட்டப்படியான நடைமுறைகளை மகாராஷ்டிர போலீஸ் கையாளவில்லை.
இவ்வாறு அரசுக்கு எதிராக பத்திரிகைத் துறையில் இயங்குவோரை நசுக்க காவல் துறை பயன்படுத்தப்படுவது 1975 கால நெருக்கடிநிலையையே நினைவுபடுத்துகிறது. இதனை தேசிய சிந்தனைக் கழகம், அதன் அகில பாரத அமைப்பான பிரக்ஞா பிரவாஹ் அமைப்புகளின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
சட்டம் தனது கடமையைச் செய்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், தனக்கு வேண்டாதோரை வேட்டையாட சட்டத்தை அரசு ஒரு கருவியாக்குவதை ஏற்க இயலாது. திரு. அர்ணாப் கோஸ்வாமியை மகாராஷ்டிர அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். இந்த விஷயத்தி