ஆன்லைன் புக்கிங் டாக்ஸிகளை கட்டுபடுத்த வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர் டாக்ஸி ஓட்டுநர்கள்.
மதுரையில் ஆன்லைன் கால் டாக்ஸிகளை அரசு கட்டுப்படுத்தக்கோரி, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மதுரை மாவட்ட அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் மனு அளித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கொரோனாவால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுலா வாகனங்கள் கடந்த சில மாதங்களாக இயங்காமல், சாலை வரி, இன்சூரன்ஸ், வங்கிக் கடன் ஆகியவை கட்டவேண்டிய நிலையில், மதுரை நகரில் ஆன்லைன் மூலம் வாகனங்கள் புக்கிங் செய்யப்படுவதால், வாகனங்கள் மதுரை அவுட்டோரில் வெளி மாநில, மாவட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டு, ஆன் லைன் மூலம் வாகனப் பயணம் மேற்கொள்வதால், சுற்றுலா வாகனங்கள் செயல்பாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
மனு அளிக்க வந்தவர்களில் பெரும்பாலோர் மாஸ்க் அணியாமல் வந்தது, மக்கள் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.