சூரப்பா மீதான விசாரணை குழு ஏன்? ஓபிஎஸ் பதில்!

சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
ops-in-madurai
ops-in-madurai

மதுரை விமான நிலையத்தில் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், அனைத்து தமிழக மக்களுக்கும் இதயபூர்வமான தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.

மேலும், உலக நாடுகள் கொரோனா நோய்க்கு தடுத்து நிறுத்துவதற்காக உரிய மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மனித உடலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும்… என்றார்.

தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிராக தமிழக அரசு திடீரென விசாரணை குழு அமைத்து உள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த போது, அது சார்பாக தமிழக அரசு சார்பில் முடிவுகள் எடுக்கவில்லை என்றார், மதுரை விமான நிலையத்தில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.