
ஹைதராபாத்: தெலங்காணா மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கும் நிலையில், அரசின் உத்தரவை மீறி பைக்கி்ல் வந்தவர்களைத் தடுத்து நிறுத்திய காவல் துறை அதிகாரியின் சட்டையைப் பிடித்து ஒரு முஸ்லிம் பெண் தகராறு செய்த வீடியோ சமூகத் தளங்களில் வைரலாகி, கடும் கண்டனத்தைப் பெற்றுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டு அமலில் உள்ளது. இந்நிலையில் தெலங்காணா மாநிலம் ஹைதராபாத் மௌலாஅலி பகுதியில் லாலாபட் சோதனைச்சாவடி அருகே போலீஸார் நின்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரே பைக்கில் ஒரு பெண் தனது மகன், மற்றொருவர் என மூன்று பேராக வந்த நிலையில், அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். தெலங்காணா மாநிலத்தில், முதல்வர் சந்திரசேகர ராவ், ஊரடங்கை மீறி தேவையற்ற விதத்தில் வெளியில் சுற்றுபவர்களை கண்டதும் சுடலாம் என்ற ரீதியில் கூறியிருக்கும் சூழலில், போலீஸார் அவர்களைத் தடுத்தி நிறுத்தி, கேள்வி கேட்டதுடன், ஊடரங்கை மீறியதற்காக வழக்குப் பதிவு செய்து, அபராதம் வசூலித்ததுடன், பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பைக்கில் வந்த இஸ்லாமியப் பெண்மணி, அப்போது பணியில் இருந்த காவல் அதிகாரியின் சட்டையைப் பிடித்து இழுத்து, கண்டபடி திட்டி கூச்சல் போட்டு, அவருடன் தகராறில் ஈடுபட்டார்.
சக போலீஸ்காரர்கள் உடன் இருக்க, இவ்வாறு காவல் அதிகாரியின் சட்டையைப் பிடித்து ஒரு பெண்மணி கண்டபடி திட்டுவது குறித்த வீடியோ காட்சி தற்போது சமூகத் தளங்களில் வைரலாகி, கடும் கண்டனங்களைப் பெற்றுள்ளது.