அஜித்தை பின்பற்றிய விஜய் ரசிகர்கள்!

தமிழகம் பொது தகவல்கள்
police 1 - 2026

தல அஜித் அவர்கள் தான் நடிக்கும் படங்களில் வேலை செய்யும் படக்குழுவுக்கு தன் கையாலே பிரியாணி செய்து கொடுத்து அசத்துவார் இது யாவரும் அறிந்ததே

அதே போல் தன் வீட்டுக்கு வரும் விருந்தினருக்கும் தன் கையாலே பிரியாணி செய்து தட்டைக் கூட தானே கழுவும் அன்பும் பண்பும் நிறைந்தவர்

பல உயர்ந்த பண்புகளை தன்னிடம் கொண்டவர் கொரோனா பிரச்சனைக்கும் நிறைய உதவிகளை வெளியில் தெரியாமல் செய்து கொண்டு இருப்பவர் விளம்பரத்தை விரும்பாத எளிய மனிதர்.

ajith - 2026

இந்நிலையில் அஜித்தின் பிரியாணி விருந்தோம்பலை விஜய் ரசிகர்கள் பின்பற்றி கொரோனாவுக்கு எதிராக போராடும் காவலர்களுக்கு வழங்கி உள்ளனர்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவை தவிர்த்து வேறு யாரும் வெளியே செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஆங்காங்கே சில இடங்களில் அத்துமீறல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து, ஊரடங்கினைப் பொதுமக்கள் சரியாகக் கடைப்பிடிக்கும் வகையில் காவல்துறையினர் 24 மணி நேரம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

priyani 1 1 - 2026

குறிப்பாக, ஏராளமான போலீஸார் நல்ல சாப்பாடு தான் வேண்டும் என்று நினைக்காமல் கிடைக்கின்ற சாப்பாடுகளைச் சாப்பிட்டு தங்களது பணியினைத் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் காவலர்களுக்கு ஒரு நாளாவது பிரியாணி விருந்து போட வேண்டும் என்று விரும்பிய புதுக்கோட்டை விஜய் ரசிகர்கள் மாவட்டத்தில் உள்ள 200 போலீஸாருக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்தியிருக்கின்றனர்.

இது குறித்து கூறிய விஜய் ரசிகர் ஒருவர் , கொடூரமான கொரோனாவைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்தாலும், கொரோனாவை ஒழிக்கும் போராட்டத்தில், டாக்டர்கள், நர்ஸ், தூய்மைப் பணியாளர்கள், போலீஸாருடைய பங்குதான் அதிகம். ஊரடங்கைச் சரியாக கடைப்பிடிக்க வைக்க தினமும் சாலையில் நின்னு போலீஸார் நமக்காகப் போராடுறாங்க. போலீஸ் வேலை பார்க்குற நண்பர்கள்கிட்ட கேட்டோம்.

priyani 2 - 2026

சாப்பாடு எல்லாம் கிடைச்சிரும். ஆனா, நேரத்துக்குக் கிடைக்காது. கிடைக்கிறப்ப சாப்பிடணும். பிரியாணி எல்லாம் கண்ணுல பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு சொன்னாங்க. அப்பதான் போலீஸாருக்கு பிரியாணி விருந்து போடலாம்னு முடிவு பண்ணோம்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

இதுக்காக, 200 பிரியாணி பொட்டலங்களைத் தயார் செய்து, நகர் ஸ்டேஷன், கணேஷ் நகர் ஸ்டேஷன், டிராஃபிக் போலீஸ் அலுவலகம்னு போலீஸார் இருக்கும் இடங்களுக்கு நேரடியாகப் போய் பிரியாணி பொட்டலங்களையும் தண்ணீர் பாட்டிலையும் கொடுத்திட்டு வந்தோம்.

priyani - 2026

எல்லாரும் ரொம்பவே சந்தோஷமாக வாங்கிக்கிட்டாங்க. எங்களுக்கும் ரொம்பவே சந்தோஷம். தொடர்ந்து, நமக்காகப் போராடும் தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட அனைவருக்கும் எங்களால முடிஞ்ச உதவிகளைச் செய்யணும் என்கிறார். என்னை போன்று மற்றவர்களும் தங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.