தமிழகத்தில் குண்டு வெடிக்கும்! இஸ்லாமிய இளம் மாணவர்கள் பெயரில் வெளிப்படையான மிரட்டல்!

Published:

threaten letter to rss office madurai from al umma2 - 2026

தமிழகத்தில் வெளிப்படையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்டிருக்கிறது. நாங்க தான் எல்லாமே! இங்கே நாங்க நினைச்சது தான் நடக்கணும், நடக்கும்! என்று இஸ்லாமிய பயங்கரவாதிகளின் நேரடி சவால் இப்போது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

threaten letter to rss office madurai from al umma6 - 2026

கடந்த 6ஆம் தேதி, மதுரையிலிருக்கும் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்துக்கு ஒரு கடிதம் வந்தது. அனுப்பியது அல்-உம்மா என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் மாணவர் அமைப்பு.

அந்தக் கடிதத்தில்குறிப்பிடப் பட்டிருக்கும் விவரம் இதுதான்…

திருபுவனம் ராமலிங்கத்தைக் கொலை செய்தது ஒரு கிருத்துவ அமைப்பு என்றும், அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு முஸ்லிம்கள் மீது வீண் பழி போட்டு, அந்த வழக்கை என்.ஐ.ஏ விடம் நகர்த்தி முஸ்லிம்களை வஞ்சிக்கிறது பி.ஜே.பி அரசு. இந்த சி.ஏ.ஏ கூட , கிருத்துவர்கள் உள்ளிட்ட பிற மைனாரிடி மதங்களுக்குச் சலுகைகள் கொடுத்து,முஸ்லிம்களை மட்டும் குறி வைத்து அழிக்கப் பார்க்கிறது. இந்த ராமலிங்கம் கொலையில் கிறிஸ்துவர்களைக் கைது செய்யாமல் விட்டால், மதுரை மற்றும் தஞ்சாவூரில் குண்டு வைத்துச் சிதைப்போம் என்று போலீஸுக்கே மிரட்டல் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனம் பகுதியில் இருந்து இஸ்லாமிய இளம் மாணவர்கள் என்ற பெயரில் மதுரை சொக்கிகுளம் பகுதியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்துக்கு மர்ம கடிதம் ஒன்று வந்தது பகுதியில் காவல்துறை மற்றும் இந்து அமைப்பு தலைவர்களுக்கு என குறிப்பிட்டு இருந்த அந்த கடிதத்தில் இந்து தலைவர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற தனியார் தொண்டு நிறுவன ஊழியர் முஸ்லிம் இளைஞர்களின் பெயரை தவறுதலாக குறிப்பிடுகிறார் இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளோம் ஆனால் இந்த வழக்கை என்னையே விசாரணைக்கு மாற்ற முயற்சி நடைபெறுகிறது ராமலிங்கம் கொலை வழக்கில் ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து தீவிரவாத கும்பல் மற்றும் முஸ்லிம் குழுக்களை ஒருங்கிணைத்து மதுரை மற்றும் தஞ்சாவூர் பகுதியில் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது இதுகுறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பு நிர்வாகிகள் போலீசில் புகார் அளித்துள்ளன.ர்

ALSO READ:  செங்கோட்டையில் கிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலம்; கோவில்களில் குவிந்த பக்தர்கள்!
threaten letter to rss office madurai from al umma4 - 2026

இது குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கூறியபோது, இதில் வெட்கக் கேடான விஷயம் என்றால், இது தொடர்பாக புகார் பதிவு செய்யச் சொன்னால், பதிவு செய்து சி.எஸ்.ஆர் காப்பி கூட கொடுக்காமல் காவல்துறையே அலட்சியமாக இருக்கிறது. போலீஸாருக்கு இது அலட்சியமா இல்லை பயமா என்று தெரியவில்லை. இரண்டுமே வெட்கக் கேடானது தான்.

threaten letter to rss office madurai from al umma3 - 2026

வழக்குத் தொடர்பாக காவல்துறைக்கு மிரட்டல் விடுவது ஒரு புறம் என்றால், இதை மதுரை மாநகர் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்துக்கே அனுப்பியிருக்கிறார்கள். மதுரையில் இருக்கும் பெரும்பாலான ஆர்.எஸ்.எஸ் நபர்களுக்கும் சொக்கிகுளத்தில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் குறித்து தெரியவே தெரியாது. அப்படி இருக்கும் போது அந்த முகவரிக்கு இவர்கள் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள் என்றால், எவ்வளவுதூரம் இறங்கி வேலை செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள் என்கின்றனர் ஆர்.எஸ்.எஸ்/காரர்கள்.

threaten letter to rss office madurai from al umma5 - 2026

இவ்வாறு அனுப்பப் பட்ட மிரட்டல் கடிதத்தில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு முக்கியமான செய்தி, மதுரையிலும் தஞ்சையிலும் குண்டு வைப்போம் என்று மிரட்டல் கடிதம் அனுப்பி, அனைவரின் கவனத்தையும் இந்தப் பக்கம் திருப்பி விட்டு விட்டு தமிழகத்தில் வேறெங்கேயோ மிகப் பெரிய அசம்பாவிதம் செய்யத் திட்டம் போட்டிருக்கிறார்கள்… என்று தெரிகிறது.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!
threaten letter to rss office madurai from al umma - 2026

இத்தனை வெளிப்படையான மிரட்டல் விடுத்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுக்கிறது என்றால், மாநில அரசு என்ன மாதிரியான பாதுகாப்பு நிர்வாகம் செய்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

threaten letter to rss office madurai from al umma7 - 2026

அரசு அலட்சியமாக இருக்கும் பொழுது குடிமக்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ள வேண்டியது நிலை ஏற்படும். தமிழகத்தில் எங்கேயோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்பது மட்டும் நிச்சயம். அது, நம் வீட்டிற்கும், நம் பிள்ளைகள் படிக்கும் பள்ளி/ கல்லூரிகளில் என்று எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்று கவலையுடன் கருத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர் இந்து அமைப்பினர்!

Related articles

Recent articles

spot_img