பலமான பாரதத்தைப் பறை சாற்றும்… அக்னி பிரைம்!

agni prime - 2026

கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘அக்னி பி’ ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘அக்னி பி’ ஏவுகணை சோதனையை ஒடிசா மாநிலத்தின் பலாசோர் அருகே உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தளத்தில் மேற்கொண்டது. இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. கிழக்குக் கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு தொலை தூரத் தொடர்பு நிலையங்கள் மற்றும் ரேடார் நிலையங்களின் மூலம் ஏவுகணை கண்காணிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பயணித்து இந்த ஏவுகணை மிகத்துல்லியமாக இலக்கை அடைந்தது.

இந்தியா தன் அக்னி ரக ஏவுகனைகளை மேம்படுத்தி Agni – P (Agni Prime) ரக ஏவுகனைகளை உருவாக்கி வந்தது, அந்த சோதனை நேற்று மகத்தான வெற்றி பெற்றிருக்கின்றது

அதாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ரகத்திலானவை இவை, நேற்று ஒரிசாவின் அப்துல்கலாம் தீவில் இருந்து வெற்றிகரமாக சோதிக்கபட்டது. இதன் வீச்சு 2000 கிமீ என சொன்னாலும் உண்மையில் 4 ஆயிரம் கிமீ வரை எளிதாக பாயும் தன்மை கொண்டவை. ஆக இனி இந்தியா சீனாவின் எந்த மூலையினையும் தாக்கும் வல்லமை பெற்றிருப்பது உறுதி செய்யப் பட்டிருக்கின்றது

இந்தியாவின் பிரித்வி ரக ஏவுகனைகள் பாகிஸ்தானை எளிதில் நொறுக்கிபோடும், ஆனால் சீனா பரந்த நாடு அதன் வட மற்றும் கிழக்கு எல்லைகளின் தொலைவு அதிகம், அவர்கள் ஷாங்காயும் பீகிங்கும் கூட கிழக்கே பாதுகாப்பாக அமைந்திருக்கின்றன‌

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

அந்த நிம்மதியினை குலைத்துவிட்டது இந்தியா, இந்த ரக ஏவுகனைகள் அணு ஆயுதத்தை சுமந்து சீனாவின் எந்த எல்லையினையும் தாக்கும் அளவு சக்திவாய்ந்தவை என்பதில் சீனாவுக்கு அச்சுறுத்தல் கூடுகின்றது

இது மாபெரும் சாதனை, உலகின் மிக பலமான ஏவுகனை நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றிருக்கின்றது. சதீஷ் தவான் முதல் கலாம் வரை நன்றி சொல்லிவிட்டு அந்த பலமான அஸ்திரத்தை ராணுவத்துக்கு கொடுக்கின்றனர் விஞ்ஞானிகள்.

விஷயத்தை கேள்விபட்ட பாகிஸ்தான் இன்னும் சில நாட்களில் டம்மி ஏவுகனையினை வீசிவிட்டு நாங்களும் அம்மாதிரி ஆயுதம் வைத்திருக்கின்றோம் என்பார்கள், சரி அவ்வளவு தூரம் வீசவேண்டிய எதிரி யார் என் கேட்டால் பதிலே வராது.

பலமான பாரதத்துக்கு பாடுபட்டு வெற்றிபெற்ற டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் | ஜெய்ஹிந்த்.


அக்னி ஒன்று.: அக்னி ஏவுகணை குடும்பத்தில் முதல் வாரிசு இந்த அக்னி ஒன்று தான். தற்போது இந்தியா இதனை மேம்படுத்தி வைத்திருக்கிறார்கள்…….அக்னி ப்ரைம் என்கிற பெயரில்.

அது இன்று காலை சரியாக 10:55 மணிக்கு ஒரிசா கடற்கரை பகுதியில் வைத்து வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்து இருக்கிறார்கள். இதன் தாக்குதல் தூரம் 1500 கிலோமீட்டர் முதல் இரண்டாயிரம் கிலோமீட்டர் வரை ….. முதல் அக்னி ஒன்றும் இதே தொலை தூரம் தான் இருந்தது. ஆனால் தற்போது இது இந்திய தொழில்நுட்பத்தில் இயங்கும் சாட்டிலைட் நேவிகேஷன் சிஸ்டம் #NavIC கொண்ட வழிகாட்டி பயன்படுத்தி இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாக மாற்றம் செய்து இருக்கிறார்கள்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

மேலும் இதில் பல புதிய தொழில்நுட்ப பண்புகளான ஹானிவெல் ரிங் லேசர் க்ரைரோஸ்கோப்பிக் போன்றவற்றையும் இணைத்து இருக்கிறார்கள். தாக்குதல் இலக்கு 110° முதல் 170° கோணம் மாற்றி கொண்டும் தாக்கும் வல்லமையை கொண்டதாக இது இருக்கும்.

இதனை இப்படி புரிந்து கொள்ளலாம்.குறி வைக்கப்பட்ட இலக்கு ஏவப்பட்ட ஏவுகணைக்கு 180° கோணத்திற்கு தாக்குதல் நடத்த சந்தர்ப்பத்தை கொடுக்கும் என்றால் இந்த அக்னி ப்ரைம் அந்த இலக்கின் பின்பகுதியில் உள்ள 180° கோணத்தில் 110° முதல் 170° வரை சென்று தாக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.

சரியாக சொன்னால் இலக்கின் 360° கோணத்தில் 350° கோணம் வரை அக்னி ப்ரைமின் இலக்கு கீழ் வந்து விடும் என்பது இதன் அர்த்தம். உலக அளவில் இது தான் அதி உச்ச துல்லிய தாக்குதல் திறன் கொண்ட ஏவுகணை ஆகும்.

அக்னி ஏவுகணையை வானில் வைத்து மறிப்பது நடக்காத காரியம்….. மற்றும் இதனை திசை திருப்பவும் அல்லது குழப்பவும் எதிரி வசம் உள்ள எந்த எலக்ட்ரானிக் சாதனங்களாலும் முடியாத ஒன்றாக இருக்கப் போகிறது.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

நம் கண் முன்னே இந்த உலகின் பலம் வாய்ந்த தாக்குதல் படையணியான இந்தியா உருப்பெற்று வருகிறது என்பது மாத்திரம் நிதர்சனமான உண்மை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories