தாய்க்கு கொரோனா: பிறந்த குழந்தைக்கு தாய்பால் கூட கொடுக்க முடியாமல் தவிப்பு!

சற்றுமுன் தமிழகம்
baby

பிறந்த ஒரே நாளில், குழந்தையை, தாயிடம் இருந்து, கொரோனா பிரித்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் கூடச்சேரியை சேர்ந்த, 28 வயதான கர்ப்பிணி பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், அப்பெண்ணுக்கு ஏற்கனவே இரு மகன்கள் இருந்த நிலையில், குடும்ப கட்டுப்பாடு செய்வதற்காக முதற்கட்டமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், குழந்தையையும், தாயையும் பிரித்து, தாயை கொரோனா வார்டில் சேர்த்தனர். குழந்தையை, ப.வேலூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தியுள்ளனர்.

இதனால், பிறந்து ஒரே நாளான நிலையில், குழந்தைக்கு அத்தியாவசியமாக அளிக்க வேண்டிய ஊட்டச்சத்தான தாய்ப்பாலை கூட வழங்க முடியாமல், தாயையும், குழந்தையையும் கொரோனா தொற்று பிரித்துள்ளது.

இது, மருத்துவமனையில் இருந்த அனைவரிடமும் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.