
கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார்.
மதுரை அருகே, சோழவந்தான் ராயபுரம் கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக் கடிதங்கள் அனுப்பி உள்ளார்.
இரு பக்கங்களை கொண்ட கடிதத்தில் “பரிக்சா பே சர்ச்சா” தலைப்பில், ஐந்து உயிர் மூச்சான கொள்கைகள் உன்னதமான இந்தியாவிற்காக எனும் முக தலைப்பிட்டு வளர்ச்சி அடைந்த பாரத்தின் இலக்கு, அடிமை சிந்தனையை அறவே நீக்குதல், நம் பாரம்பரியத்தை கொண்டாடுதல், ஒற்றுமையை உறுதி செய்தல், கடமைகளில் கவனம் செலுத்துதல் ஆகிய தலைப்புகளைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரிடம் இருந்து கடிதம் வரப் பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி முதல்வர் அபிராமி, டயானா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.