ஏப்ரல் 23, 2021, 6:57 காலை வெள்ளிக்கிழமை
More

  சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் மாநில செயற்குழுக் கூட்டம்!

  கோயம்புத்தூர், தேனி, தஞ்சாவூர், திண்டுக்கல், தூத்துக்குடி, தென்காசி. மேற்கண்ட 6 மாவட்டப் பொறுப்பாளர்களும் அதற்கான வேலைகளை

  sabarimalai-ayyappa-seva-samajam
  sabarimalai-ayyappa-seva-samajam

  சபரிமலை ஐயப்பசேவா சமாஜம் தென் தமிழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் 18/11/2020 புதன் கிழமை #திண்டுக்கல் மாவட்டம் #பழனியில் மெய்த்தவ பொற்சபையில் மாநிலத் தலைவர் ராஜகோபால் துரை ராஜா தலைமையில், தேசிய செயலாளரும், தென் தமிழகத்தின் பிரபாரியுமான Dr. கணேசன் முன்னிலையில் நடைபெற்றது.

  செயற்குழுவில் மாநில பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் மாநில அமைப்பு செயலாளர் சிவப்பிரகாசம், மாநில நிர்வாக செயலாளர் ஜெயக்குமார் மாநில பொருளாளர் செந்தில் குமார் மற்றும் மாநில நிர்வாகிகளும் தென் தமிழகத்தின் அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

  sabarimalai-ayyappa-seva-samajam1
  sabarimalai-ayyappa-seva-samajam1

  செயற்குழு கூட்டம் தென் தமிழகத்தின் மாநிலத் துணைத் தலைவர் சந்திரமௌலீஸ்வரன் வரவேற்புரை வழங்க இனிதே துவங்கியது. முதலாவதாக நமது சமாஜத்தின் மேலான வளர்ச்சிக்கு நாம் அனைவரும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து மாநில மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்களிடம் ஆலோசனை மற்றும் கருத்து கேட்கப்பட்டது. அதன் பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் செயற்குழுவில் ஏகமனதாக முடிவு செய்து நிறைவேற்றப்பட்டது.

  1. தென் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக மாவட்டக் கமிட்டி அமைக்க வேண்டும்.
  2. அனைத்து மாவட்ட, மண்டல, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி என அனைத்துப் பொறுப்பாளர்களும் கட்டாயம் ஆயுட்கால உறுப்பினர் ஆக விரைவில் சேர வலியுறுத்தப்பட்டது.
  3. தென் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஐயப்ப சுவாமியின் உத்திர பூஜையை மாவட்டத்தில் 100 இடங்களில் மாதந்தோறும் நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
  4. பிரபாவி மாவட்டமாக கீழ்க்கண்ட 6 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்ட உள்ளது. கோயம்புத்தூர், தேனி, தஞ்சாவூர், திண்டுக்கல், தூத்துக்குடி, தென்காசி. மேற்கண்ட 6 மாவட்டப் பொறுப்பாளர்களும் அதற்கான வேலைகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.
  5. காம்யுஷக நிதி மற்றும் மாதாந்திர வரவு செலவு கணக்குகளை முறையாக பிரதி மாதம் 30 ம் தேதிக்குள் மாநிலத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
  6. நமது சமாஜத்தின் அய்யப்ப வாகினி மாதாந்திர பத்திரிகையை ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 1000 ஐயப்ப பக்தர்களுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
  7. அடுத்த பொதுக் குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் நடைபெறும் மாவட்டங்கள் முடிவு செய்யப்பட்டது.
  8. நமது சமாஜத்தின் மகளிர் மோக்சா பொறுப்பாளர்கள் 3 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டது.
  9. மேலும் மாநிலக் கமிட்டியின் அனைத்து பொறுப்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்…
   செயற்குழுவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மெய்த்தவ பொற்சபையின் ஸ்ரீ செந்தில் சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்கள்…
   தென் தமிழகத்தின் மாநில செயற்குழு மாநில செயலாளர் திண்டுக்கல் ராமகிருஷ்ணன் நன்றியுரை நல்க இனிதே நிறைவுற்றது…

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,233FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »