நிவர் புயல்; மதுரை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

Published:

nivar-cyclone-image1
nivar-cyclone-image1

நிவர் புயலுக்காக மதுரை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

நிவர் புயலின் எதிரொலியாக மதுரை விமான நிலையத்தில் ஓடுதளங்களில் மழை நீர் தேங்காத வண்ணம் கழிவு நீர் கால்வாய் குழாய்களின் பழுதுநீக்கம் பணிகள் தீவிரப்படுத்தியுள்ளது,

விமான ஓடுத்தளங்கள் மற்றும் நிறுத்துமிடங்களில் அந்தந்த ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது, தொடர்ந்து புயலின் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் விமான நிலைய கட்டடத்தின் இலகுவான பாகங்களை வலுப்படுத்தும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். தொடர்ந்து சமிக்கை விளக்குகள் செயல்பாட்டு திறன் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் சென்னையில் புயலின் தாக்கம் காரணமாக இரண்டு தினங்களுக்கு இரண்டு இண்டிகோ விமானங்களை மதுரை விமான நிலையத்தில் பார்க்கிங் செய்வதகற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலைய வளாகத்தில் நிவர் புயலின் மழை முன்னெச்சரிக்கை நடவெடிக்கை மேற்கொண்டு வருவதாக மதுரை விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன் தகவல் தெரிவித்தார்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

Related articles

Recent articles

spot_img