கடந்த சில வருடங்களாகவே மலையாளத்தில் சிறப்பான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை இயக்கும் புதிய இயக்குனர்கள் அதிகரித்துள்ளனர். அந்த வரிசையில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் ஜல்லிக்கட்டு.

மனிதனுக்குள் இருக்கும் ஆதி மனிதனின் குணத்தை இப்படம் அப்பட்டமாக காட்டியது. ஒரு மாட்டை வைத்துக்கொண்டு முழு திரைப்படத்திற்குமான திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. இப்படத்தை லியோ ஜோஸ் பெல்லிஸ்ரி இயக்கியிருந்தார். அந்தோனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். மாறுபட்ட சினிமாவை விரும்பும் ரசிகர்களும், விமர்சகர்களும் இப்படத்தை வெகுவாக பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில், 2019ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான பிறமொழி படங்களின் பிரிவில் இந்தியா சார்பில் போட்டியிட இப்படம் தேர்வாகியுள்ளது. இது மலையாள சினிமா உலகினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழுவினருக்கு மலையாள சினிமா உலகினரின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending