படப்பிடிப்பில் ரத்தம் சொட்ட சொட்ட அஜித் – வலிமை அதிர்ச்சி அப்டேட்

Published:

வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

அஜித் ஒரு கார் மற்றும் பைக் ரேசர் என்பவதால் வழக்கமாக அவர் நடிக்கும் படங்களில் அவர் ஸ்டைலாக மற்றும் அதி வேகமாக பைக் மற்றும் கார் ஓட்டும் காட்சிகளை இயக்குனர்கள் வைப்பது வழக்கம். அதுபோல, வலிமை படத்திலும் அஜித் அதிக எடையுள்ள ஒரு பைக்கை வேகமாக ஓட்டும் காட்சி எடுக்கப்பட்டதாம். அப்போது படுவேகமாக பைக் ஓட்டிய அஜித் பைக்கை வீலீங் செய்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் கீழே விழுந்து பைக் அவரை தரதரவென இழுத்து சென்றுள்ளது. இதன் காரணமாக அஜித் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாம். இதைக்கண்டு படக்குழுவினர் பதறிப்போய் அவரை தூக்கியுள்ளனர்.

ஆனாலும், சிறிது நேரம் ஓய்வெடுத்து அந்த நாளின் படப்பிடிப்பை முடித்துவிட்டே பிறகே அஜீத் தனது அறைக்கு திரும்பியிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. தற்போது காயங்கள் ஆறி மீண்டும் படப்பிடிப்பிற்கு தயாராகி விட்டாராம் தல அஜித்.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

Related articles

Recent articles

spot_img