எம்ஆதார் தரும் பயனுள்ள சேவைகள்!

இந்தியா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
aadhaar 1 - 2026

டிஜிட்டல் மயத்தை ஊக்குவிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட எம்ஆதார் செயலி கடந்த ஆண்டு இறுதியில் அப்டேட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

இந்த எம்ஆதார் மூலம் கிட்டத்தட்ட 35 வகையான ஆதார் தொடர்பான சேவைகளை ஒரு பயனாளர் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணத்தின் போது ஒரு பயனாளர் தங்கள் கைவசம் ஆதார் அட்டையை வைத்திருக்காவிட்டாலும் கூட, தங்களது அடையாளத்தை நிரூபிக்க முடியும் எம்ஆதார் இருந்தால்.

மேலும், ஆதார் அட்டையை டவுன்லோடு செய்வது, ஆதார் மையங்கள் எங்கே இருக்கிறது என்ற விவரங்களை அறிவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெற முடியும்.

தற்போது எம்ஆதார் செயலி தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் உள்ளது.
முகவரி மாற்றம், ஆதாருடன் வங்கிக் கணக்கை இணைப்பது உள்ளிட்ட சேவைகளையும் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.