அதிமுக., வெற்றிக்காக… அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆலோசனை!

Published:

admk-rajendrabalaji1
admk-rajendrabalaji1

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற இராஜபாளையத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆலோசனை மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் பால்வளத் துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி இராஜபாளையம் அதிமுக நகர ஒன்றியம் மற்றும் தொகுதி கழக பொறுப்பாளர் மற்றும் மகளிரணியினர் இடம் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

admk-rajendrabalaji
admk-rajendrabalaji

இதில் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி முழுவதும் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும்; வார்டு வாரியாக கட்சி உறுப்பினர் சேர்த்து அதிமுக வெற்றி பெறுவதற்கு பாடுபட வேண்டும் அனைவரும் ஒற்றுமையை வெற்றிக்க உழைக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து புத்தூர் ஐயப்பன் கோவில் பூஜைக்காக 1 லட்சம் சுந்தரராஜபுரம் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு 1 லட்சம் நிதி உதவியும் வழங்கினார்.

ALSO READ:  நூல் அறிமுகம்: The Significance of Sri Aurobindo Ashram in the Evolution of Humanity

Related articles

Recent articles

spot_img