
சிலைமான் நான்கு வழிச் சாலை அருகே பீடி தரவில்லை என 60 வயது முதியவரை கொலை செய்ய முயற்சித்த 3 மர்ம நபர்கள் போலீஸார் வழக்கு!
மதுரை மாவட்டம் சிலைமான் நான்குவழிச்சாலை அருகே உணவகம் நடத்தி வருபவர் ராஜமூர்த்தி வயது 57 இவரது உணவகத்தில் பாதுகாவலராக கணேசன் 60 என்பவர் பணிபுரிந்து வருகிறார்
நேற்று கடை முடிந்து இரவு கணேசன் கடையின் உள்ளே இருந்துள்ளார் அப்போது அப்பகுதியில் வந்த 3 மர்ம நபர்கள் கடையில் இருந்த கணேசனிடம் பீடி தரும்படி கேட்டுள்ளனர்.
கடை முடிந்துவிட்டது என கணேசன் கூற அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர் தகராறு கைகலப்பாக மாறி கணேசனை இரும்பு கம்பி மற்றும் கட்டையால் மூன்று நபர்கள் தாக்கியுள்ளனர் இதில் பலத்த காயமடைந்த கணேசன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
உணவகத்தின் உரிமையாளர் ராஜமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கணேசனை தாக்கிய 3 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
டி. புதுப்பட்டி கிராமத்தில் பூட்டிய வீட்டை உடைத்து ரூ. 12000 திருட்டு
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா டி.புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகவனிதா வயது 39 இவர் கோயமுத்தூரில் உணவகம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நவம்பர் 26ஆம் தேதி குடும்பத்துடன் கோயம்புத்தூர் சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று டீ புதுப்பட்டி வீட்டின் அருகே நாக வனிதாவின் உறவினர் மகாலட்சுமி தொலைபேசி மூலம் அழைத்து வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக கோயமுத்தூரில் இருந்து மதுரை வந்த நாகவனிதா வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூபாய் 12,000 பணம் திருடப்பட்டது தெரியவந்தது
இதனை அடுத்து சம்பவம் குறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து ரூபாய் 12,000 திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
திருநகர் பகுதியில் பணம் திருடியதாக தாய் கூறியதை தாங்க முடியாத 16 வயது மகள் மாயம்!
மதுரை
மதுரை மாவட்டம் திருநகர் பகுதியில் வசித்து வருபவர் 16 வயது மாணவி இவரது தாய் வீட்டில் வைத்திருந்த ரூபாய் ஆயிரம் பணத்தை காணவில்லை எனக் கூறி 16 வயது மகளை திட்டியுள்ளார்.
இதில் மனமுடைந்த 16 வயது மகள் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். வெகுநேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் தாய் அருகில் உள்ள அனைத்து இடங்களிலும் தேடி சென்றுள்ளார் ஆனால் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை இதனால் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாயமான 16 வயது மாணவியை தேடி வருகின்றனர்.
வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்தவர் கைது
மதுரை மாவட்டம் வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்படி, வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அவனியாபுரம் காவல்துறையினர் சோதனை செய்தனர் அப்போது, ஜெயந்தி புரத்தை சேர்ந்த ஜெயசீலன் வயது 50 என்பவர் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திருநகர் பகுதியில் சட்டத்திற்குப் புறம்பாக கடையில் வைத்து குட்கா பான்மசாலா விற்பனை செய்வர் கைது!
மதுரை மாவட்டம் திருநகர் குறிஞ்சி நகர் பகுதியில் வசித்து வருபவர் ராமநாதன் வயது 53. இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
ராமநாதன் தனது பெட்டி கடையில் வைத்து தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா விற்பனை செய்வதாக திருநகர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில், திருநகர் காவல்துறையினர் ராமநாதன் பெட்டிக் கடையில் சோதனை செய்தனர் அப்போது தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா இருப்பது தெரியவந்தது இதனை அடுத்து ராமநாதனை கைது செய்த காவல்துறையினர் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த குட்கா மற்றும் பான் மசாலா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.