போக்குவரத்து கழக ஊழியர்களின் அடாவடி

Published:

ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதால் நடு வழியில்பேருந்துகளை நிறுத்தி தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து தொழிலாளர்கள் நிலைமை மிகவும் கொடுமையானது.. அவர்களை அரசுகள் காலம் காலமாய் சாகடித்து வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை..

ஆனால் பிரச்சினை என்பது அவர்களுக்கும் அரசுக்கும் இடையிலானது.. இதில் பொதுமக்களை தண்டிப்பது எந்த வகையில் நியாயம்,

டிக்கெட் வாங்கிக்கொண்டு ஏறிய பயணிகளை நடுவழியில் இறக்கிவிடுவது கொடுமையின் உச்ச கட்டம்..இந்த அதிகாரத்தை போக்குவரத்து ஊழியர்களுக்கு யார்  கொடுத்தது..?

பயண தடத்தை ஓட்டி முடித்து டெப்போவில் போய் வண்டிகளை நிறுத்திவிட்டு வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்க வேண்டியதுதானே?

நடுவழியில் நிறுத்தப்பட்டதால் தவிக்கும் மக்களில் போக்குவரத்து ஊழியர்களின் குடும்பத்தினர் இருந்தால் அவர்கள் இந்த செய்கையை பாராட்டுவார்களா?

மக்களின் வெறுப்பை சம்பாதித்தால்…. போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நல்லதல்ல..

Related articles

Recent articles

spot_img