மொபைல் திருட்டில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் சென்னையில் கைது

Published:

சென்னை, தி. நகர் பகுதியில் கடந்த (01.01.2018), மற்றும் (02.01.2018) இந்த இரு தினங்களில் தனியாக சாலையில் நடந்து செல்லும் நபர்களிடம், மோட்டார் பைக்குகளில் வணிக மர்மநபர்கள் செல்போகளை பறித்து சென்றுள்ளனர்.

இது குறித்து R -1 மாம்பழம் காவல்நிலையத்தில் ஏராளமானோர் அந்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி புகார் அளித்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சென்னை காவல் ஆணையர் ஏ. கே.விஸ்வநாதன் அவர்களின் உத்தரவின் கீழ், துணை ஆணையர் மேற்பார்வையில், தி. நகர் உதவி ஆணையர் செல்வன் தலைமையிலான , மாம்பழம் காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் சேகர், உதவி ஆய்வாளர் முனிராஜ், செல்வராஜ், ஜெகநாதன், சதீஷ்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை குழு திருட்டு சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு. அங்குள்ள CCTV கேமரா பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

அந்த CCTV பதிவில் உள்ள நபர்களை பார்த்தபோது அவர்கள் அனைவரும் ஏற்கனவே இதே போல் பல சம்பவங்களில் ஈடுபட்ட சுரேஷ்(21), பிரதீப்(21), ராஜா(24), சரவணன்(20), லோகேஷ்(21) என தெரியயவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக R -1 மாம்பழம் காவல் நிலையத்தில் 1754/2017, 07/2018, 08/2018, 13/2018, மற்றும் 15/2018 ச/பி.379 ன்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

செல்போன் பருப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காவலர்கள் பதுங்கியிருந்து 24 மணிநேரத்தில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து அதிகமான விலைமதிப்புள்ள செல்போன்களை மீட்டனர்.

செல்போன் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை துரிதமாக செயல்பட்டு, உடனடியாக கைது செய்த தனிப்படை காவலர்களை கமிஷ்னர் ஏ. கே விஸ்வநாதன் வெகுவாக பாராட்டினார்.

Related articles

Recent articles

spot_img