4 பஸ் உள்ள தனியார் லாபத்தில் இயங்கும் போது 40 ஆயிரம் பஸ் கொண்ட அரசு ஏன் நஷ்டத்தில்?: தமிழிசை

சற்றுமுன் தமிழகம்

சென்னை :

நான்கு பஸ்களை இயக்கும் தனியார் முதலாளிகள் லாபம் காணும்போது தினமும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்களை இயக்கும் அரசு மட்டும் ஏன் நஷ்டத்தில் இயங்குகிறது என்று பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டம் இன்று ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. நிலைமையை சமாளிக்கும் பொருட்டு, அரசு தற்காலிக ஊழியர்களை நியமித்து பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்நிலையில் பேச்சுவார்த்தையில் பெரிய அளவில் முன்னேற்றம் இன்றி இழுபறியே நீடித்து வருகிறது.

இந்நிலையில் தமிழிசை சௌந்தர்ராஜன் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது:

நான்கு பஸ்களை மட்டுமே இயக்கும் தனியார் நிறுவன முதலாளிகள் லாபம் பார்க்கும்போது, தினமும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்களை இயக்கும் அரசு, நஷ்டத்தில் இயங்குவது ஏனோ என்று கேள்வி எழுப்பியுள்ளார். பஸ் டிரைவர்களின் போராட்டத்தால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

போக்குவரத்து துறையின் இந்த அவல நிலைக்கு திராவிட கட்சிகளே காரணம் என தமிழிசை, டுவிட்டரில் குற்றம்சாட்டியுள்ளார். பஸ்களை அரசுடைமை ஆக்கி, நஷ்டத்தில் தள்ளிவிட்டதே திராவிட கட்சி ஆட்சியாளர்களின் சாதனையா என்று அவர் வினா எழுப்பியுள்ளார்.

நஷ்டத்தில் இயங்கிவரும் போக்குவரத்து துறையை சீரமைக்க, தொழிலாளர்களை அதில் பங்குதாரர்களாக மாற்றி நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும் என்று அரசுக்கு தமிழிசை யோசனை தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.