காதலன் இறந்த சோகம்.. காதலி தீ வைத்துத் தற்கொலை!

Published:

fire bath 2
fire bath 2

காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூரில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுஜாதா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சுஜாதாவும், அவரது உறவினரான சிலம்பரசன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களின் காதலுக்கு சிலம்பரசனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 2ஆம் தேதி சிலம்பரசன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனாலேயே சுஜாதாவின் பெற்றோர் அவரை அழைத்துக்கொண்டு ஆவடியில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு வந்து தங்கியுள்ளனர்.

இந்நிலையில் வீட்டில் உள்ள அனைவரும் வெளியே சென்ற பிறகு சுஜாதா தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.

இதனை அடுத்து வீட்டிற்கு வந்தவர்கள் சுஜாதா உடல் கருகிய நிலையில் சடலமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன் பின் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த முத்தபுதுபேட்டை காவல்துறையினர் இளம்பெண்ணின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இவர்களின் முதற்கட்ட விசாரணையில் தனது காதலன் இறந்த துக்கம் தாங்காமல் சுஜாதா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது

Related articles

Recent articles

spot_img