- அண்ணாமலையர் தனித்து இருக்கும்போது மட்டுமே வழிபடும் குணம் கொண்ட பிருங்கி முனிவரின் பக்தியை மெச்சும் விதமாக, பார்வதியை பிரிந்து சென்று சிவன் தரிசனம் தந்தார் என்பது புராணம். இதனால், கோபமடைந்த பார்வதியை, அண்ணாமலையர் சமாதானம் செய்து இணையும் வைபவம், திருவூடல் உற்சவமாக ஆண்டுதோறும் திருவண்ணாமலையில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் இந்த வைபவத்தையொட்டி, உண்ணாமுலை அம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையர் பவனி வந்து திருமஞ்சன கோபுர தெருவில் உள்ள குமர கோயிலில் எழுந்தருளினார். இந்த திருவூடல் வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவூடல் வைபவம்
Published:

