கீழப்பாவூரில் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள் விழா

சற்றுமுன்
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 101  வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக புறநகர்  மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 101 வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் அதிமுகவினரால்  கொண்டாடப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த  கீழப்பாவூரில் அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற  நிகழ்ச்சிக்கு புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி தலைமை  தாங்கி எம்.ஜி.ஆர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் காமராஜர் பூங்கா, சென்ட்ரல் வங்கி, வடக்கு பஸ்நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த கொடிகம்பங்களில் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு லட்டு வழங்கினார். இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இலங்காபுரிபட்டணம், ஆலங்குளம் பேரூர் பகுதி, மாறாந்தை பஸ்நிலையம், முக்கூடல், பாப்பாகுடி, ஆழ்வார்குறிச்சி, கடையம் ஆகிய பகுதிகளில் கட்சி கொடி ஏற்றி லட்டு வழங்கினார். 
நிகழ்ச்சிகளில் கீழப்பாவூர் கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.பால்துரை, பாசறை மாவட்ட செயலாளர் சேர்மப்பாண்டி, அட்மா சேர்மன் கணபதி, மேல்வைப் பிரதிநிதி ஜெயராமன் வக்கீல் ராஜன் உட்பட  ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.