வாக்கு எண்ணிக்கை மையங்கள்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Published:

counting - 2026

தமிழகத்தில் கடந்த 6 ஆம் தேதி 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.
தமிழகத்தில் 71.79 சதவீத வாக்குகள் பதிவானது.

தற்போது தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த சட்டமன்றத் தொகுதிகளை ஒருங்கிணைத்து, அங்கு பதிவான வாக்குகளை எண்ணும் மையங்களை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.

அதன்படி 75 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் விவரங்களைத் தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி,

திருவள்ளூர் மாவட்டம் :

கும்மிடிப்பூண்டி, பொன்னேரி தொகுதிக்கான வாக்குகள் – பெருமாள்பட்டு ஸ்ரீராம் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் எண்ணப்படும்.

திருத்தணி, திருவள்ளூர் – பெருமாள்பட்டு ஸ்ரீராம் கலை அறிவியல் கல்லூரியில் எண்ணப்படும்.

பூந்தமல்லி, ஆவடி – பெருமாள் ஸ்ரீ ராம் வித்யா மத்திய மெட்ரிக் பள்ளியில் எண்ணப்படும்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவெற்றியூர் – பெருமாள்பட்டு ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரியில் எண்ணப்படும்.

சென்னை :

ஆர்கே நகர் திரு.வி.க நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-, திருவல்லிக்கேணி – சென்னை மயிலாப்பூர் ராணி மேரி கல்லூரியில் வாக்குகள் எண்ணப்படும்.

கொளத்தூர், பெரம்பூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம்விளக்கு, அண்ணாநகர் – நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் எண்ணப்படும்.

விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி – கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்தில் எண்ணப்படும்.

செங்கல்பட்டு மாவட்டம் :

சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம் – என்சிசி கல்லூரியில் எண்ணப்படும்.

செங்கல்பட்டு, திருப்போரூர் – தண்டரைஆசான் பொரியல் கல்லூரியில் எண்ணப்படும்.

செய்யூர், மதுராந்தகம் – நெல்வாய் ஏ சி டி பொறியியல் கல்லூரியில் எண்ணப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டம் :

ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் – காரப்பேட்டை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img