கொரோனா: இயக்குனர் உயிரிழப்பு! திரையுலகினர் இரங்கல்!

Published:

dhayalan
dhayalan

பிரபல தமிழ்திரைப்பட இயக்குநர் எஸ்.தயாளன் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார்.

கொரோனா தொற்றினால் அவதிப்பட்ட தயாளன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பதை அவரது மகன் தெரிவித்துள்ளார்.

முரளி, தேவயானி, விந்தியா, வடிவேலு ஆகியோரை வைத்து கண்ணுக்கு கண்ணாக படத்தை இயக்கியவர் எஸ்.தயாளன். பங்கஜ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த 2000ம் ஆண்டில் இப்படம் திரைக்கு வந்தது.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் உதவி இயக்குனர் தயாளன், கண்ணுக்கு கண்ணாக பட இயக்குனர் ஆகி, அதன் பின்னரும் ரவிக்குமாரிடம் பணியாற்றி வந்தார்.

கொரோனாவால் அவர் உயிரிழந்துள்ளது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related articles

Recent articles

spot_img