மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

Published:

Actor Mansoor Ali Khan
Actor Mansoor Ali Khan

நடிகர் மன்சூர் அலிகான் அறுவை சிகிச்சை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். பல படங்களில் வில்லனாக தோன்றிய இவர் கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியில் திண்டுக்கல் வேட்பாளராக களமிறங்கி தோல்வி கண்டவர்.

இந்த முறை கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கியவர் 201 ஓட்டுக்கள் வாங்கி படுதோல்வியைச் சந்தித்தார்

இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுநீரக கல் பிரச்சனைக்கான மன்சூர் அலிகானுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img