மின் கட்டணம்: அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்த மக்கள்!

சற்றுமுன் தமிழகம்
electric meter
electric meter

மின் கட்டணம், வழக்கத்தை விட, மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, வாடகை வீடுகளில் வசிப்போர் கவலை தெரிவிக்கின்றனர்.ஊரடங்கு கட்டுப்பாட்டால், மின்வாரிய ஊழியர்களால், வீடுகளில் மின்கட்டண கணக்கீடு எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், ‘இம்மாத மின் கட்டணம், வழக்கத்தை விட, அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என, வாடகை வீடுகளில் வசிக்கும் பலர் புகார் கூறுகின்றனர்.

மின்வாரியத்தினர் கூறுகையில், ‘கடந்த 10 முதல் 24ம் தேதி வரையிலான நாட்களுக்குள், மின் நுகர்வோரின், முந்தைய மாத கணக்கீட்டில் இருந்து, 60வது நாள் இருக்குமானால், மின் நுகர்வோருக்கு, 2019 மே மாத மின் கட்டணமே நிர்ணயிக்கப்படும்.

ஜூலை மாத கணக்கெடுப்பின் போது, இந்த மாறுபட்ட கட்டண விகிதம் சரி செய்யப்பட்டு, நுகர்வோரின் பயன்பாட்டுக்கு ஏற்ற கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

புதிய நுகர்வோர் அல்லது அவ்வாறு இல்லாதவர்களுக்கு, இந்தாண்டு மார்ச் மாத மின் கட்டணம் வசூலிக்கப்படும்,’ என்றனர். புதிதாக வாடகை வீடுகளில் குடியேறவர்களுக்கு இந்த கட்டண உயர்வு அதிர்ச்சியளித்திருக்கிறது

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

இதற்கு காரணம், ஏற்கனவே, அந்த வீடுகளில் வசித்தவர்கள் ஏ.சி., உட்பட மின் சாதன பொருட்களை அதிகளவில் பயன்படுத்தியிருப்பர். அந்த அடிப்படையில் கூடுதல் கட்டணம் செலுத்தியிருப்பர்.

தற்போது அந்த வீடுகளில் வசிக்கும் வாடகைதாரர்கள், ஏ.சி., உள்ளிட்ட மின் சாதனப்பொருட்களின் பயன்பாடு இல்லாமல் இருப்பர். இதனால், இந்த கட்டண உயர்வு, அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வரும் மாதங்களில் இந்த கட்டண மாறுபாட்டை சரி செய்ய, மின் வாரியத்தினர் கவனம் செலுத்த வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.