அடுத்த ஒரு வாரத்துக்கு… தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கு! தமிழக அரசு அறிவிப்பு!

Published:

lockdown
lockdown

அடுத்த ஒரு வார காலத்துக்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப் படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்திருப்பதாலும், உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே வருவதாலும், முழுமையான ஊரடங்கே இவற்றின் வேகத்தை மட்டுப்படுத்த ஒரே வழி என்று கூறப் படுவதாலும் தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த முழுமையான ஊரடங்கு காலத்தில், காய்கறிகள் மற்றும் பழங்கள் வாகனங்கள் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்படும்.
ஒரு வாரம் மளிகை, காய்கறி கடைகள் செயல்படாது; நடமாடும் வாகனம் மூலம் விற்பனை செய்யப்படும்.
உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்ட செல்ல இ-பதிவுடன் அனுமதி அளிக்கப் படும்.
தலைமைச் செயலகத்திலும் மாவட்டங்களிலும் அத்தியாவசிய துறைகள் மட்டும் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

  • தமிழகத்தில் ஒரு வாரம் மளிகை கடைகள் மூடப்படும்
  • ஓட்டல்கள் வழக்கம்போல் பார்சல்கள் வழங்கலாம்
  • ஓட்டல்கள் வழக்கம்போல் பார்சல்கள் வழங்கலாம்
  • வாகனங்கள் மூலம் காய்கறிகள் விநியோகம்
  • இன்றும், நாளையும் பஸ்கள் இயங்க அனுமதி
  • பெட்ரோல் பங்குகள், ஏடிஎம் மையங்கள் செயல்பட அனுமதி
  • மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இபாஸ் தேவையில்லை
  • அனைத்து கடைகளும் நாளை செயல்பட அனுமதி
  • நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகள் செயல்பட அனுமதி
  • மருந்துக்கடைகள், நாட்டு மருந்து கடைகள் இயங்க அனுமதி
ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!
lockdown2
lockdown2

தமிழகத்தில் மேலும் ஒரு வார காலத்திற்கு தளர்வுகள் ஏதும் இன்றி, முழு ஊரடங்கு அமல்படுத்தப் படுகிறது.

முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் இயங்க அனுமதி

பால் விநியோகம், குடிநீர் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு அனுமதி

காய்கறிகள் மற்றும் பழங்கள் வாகனங்கள் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்படும்

தலைமைச் செயலகத்திலும் மாவட்டங்களிலும் அத்தியாவசிய துறைகள் மட்டும் இயங்கும்

தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும்

இன்றும், நாளையும் மட்டும் தனியார், அரசுப் பேருந்துகள் வெளியூர் செல்ல அனுமதிக்கப்படும்

அனைத்து கடைகளும் இன்று இரவு ஒன்பது மணி வரை செயல்பட அனுமதி

அனைத்து கடைகளும் நாளை காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை செயல்பட அனுமதி

மின்னணு சேவை – காலை 8மணி முதல் மாலை 6மணி வரை செயல்பட அனுமதி

மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவை இல்லை

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி

உணவகங்களில் நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி

உணவகங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி

பார்சல் சேவை அனுமதிக்கப்பட்ட நேரங்களில் ஸ்விகி, ஜெமோட்டோ மூலம் உணவுக்கு டெலிவரிக்கு அனுமதி

காலை 6 முதல் 10 வரை, மதியம் 12 மணி முதல் 3மணி வரை, மாலை 6மணி முதல் இரவு 9 மணி வரை உணவகங்களில் பார்சல் சேவைக்கு அனுமதி

பெட்ரோல், டீசல் பங்குகள் வழக்கம் போல் செயல்படும்

ஏடிஎம் எந்திரங்கள் செயல்பட தடையில்லை

வேளாண் விளைபொருட்கள், இடுபொருட்கள் கொண்டு செல்ல அனுமதி

சரக்கு வாகனங்கள் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும்

உரிய மருத்துவக்காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்

செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம்

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

இன்றும் நாளையும் மால்கள் திறக்க அனுமதி இல்லை

இன்று இரவு ஒன்பது மணி வரையும் நாளை ஒரு நாள் மட்டும் காலை 6மணி முதல் இரவு 9மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப் படும்.

Related articles

Recent articles

spot_img