அகழ் வைப்பக்கத்தில் போர்வாள், நாணயங்கள் திருட்டு! தீவிர விசாரணை!

சற்றுமுன் தமிழகம்
site museum
site museum

தருமபுரி தொல்லியல் துறை அகழ் வைப்பகத்தில் பழங்கால நாணயங்கள் திருடப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தருமபுரி நகரில் தொல்லியல் துறை அகழ் வைப்பகம் உள்ளது. இங்கு பழங்கால சிற்பங்கள், நாணயங்கள், கல்வெட்டுகள், நடுகற்கள், ஓலைச் சுவடிகள், மன்னர்கள் பயன்படுத்திய போர் வாள் மற்றும் வரலாற்று சான்றாவணங்கள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த அகழ் வைப்பகத்தில் இருந்த 30 பழங்கால நாணயங்கள், மூன்று போர் வாள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து, அகழ் வைப்பக அலுவலர் வெங்கட பிரசன்னா, தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.