
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட தந்தை காவல்துறையினர் கைது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பாரதி 47 வயதான இவர் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.
இவருக்குத் திருமணமாகி முதல் மனைவிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் முதல் மனைவி இறந்ததால் இரண்டாவதாக வேறு ஒரு திருமணம் செய்துள்ளார்.
அவருக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளன இரண்டாவது மனைவியும் இவரை விட்டு பிரிந்து சென்றதால், மூன்றாவதாக இன்னொரு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் காரணமாக சென்னையில் இருந்தபோது அங்கே மீண்டும் 2 குழந்தையின் தாயான ஜீனத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த பெண் தன் கணவனைப் பிரிந்து இவருடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது மற்ற குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர் ஜீனத்தின் 11 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையடுத்து சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரத்தை பற்றி தனது தாயாரிடம் கூறியுள்ளார் என எடுத்து அதிர்ச்சி அடைந்த தாய் உடனடியாக வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
உடனடியாக புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தந்தை பாரதியை போக்கு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.