கொரோனா: தங்கை கணவரை தொடர்ந்து தந்தையும் மரணம்! பால சரவணன் வீட்டில் தொடரும் சோகம்!

Published:

bala saravanan - 2026

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் பாலசரவணன்.

அதைத்தொடர்ந்து அவர் சினிமாவில் குட்டிப்புலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார். பின்னர் திருடன் போலீஸ், டார்லிங், ஒரு நாள் கூத்து, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஈஸ்வரன் உள்ளிட்ட பல பிரபலங்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.

இவரது தந்தை எஸ்.ஏ ரங்கநாதன். இவர் கொரோனா தொற்று காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பாலசரவணனின் தங்கையின் 32 வயதேயான கணவர் உயிரிழந்தார்.

அந்த சோகம் மறைவதற்கு முன்பு தற்போது அடுத்ததாக பாலசரவணனின் தந்தை உயிரிழந்துள்ளார். இது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

Related articles

Recent articles

spot_img