December 11, 2025, 10:31 PM
25.5 C
Chennai

சொந்த மண்ணுக்குத் திரும்ப… பண்டிட்களுக்கு கதவைத் திறந்துவிட்ட மோடி!

kashmiri pandit pic - 2025காஷ்மீர் பண்டிதர்கள் காஷ்மீர் திரும்பிச் செல்ல திரு மோதி அரசு கதவுகளை திறந்துள்ளது என்று கூறுகின்றனர், சொந்த நாட்டிலேயே அகதிகளாக நாட்டின் மற்ற பகுதிகளில் வசிக்கும் காஷ்மீரி பண்டிட்கள்.

தில்லியில் அகதியாக வசிக்கும் ஒரு காஷ்மீர் பண்டிட்டுடனான சந்திப்பில் அவர் குறிப்பிட்டவை…

லக்னோவில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370 வது பிரிவை ரத்து செய்த மத்திய அரசின் நடவடிக்கையை பாரதிய ஜனதா கட்சியினர் கொண்டாடுகின்றனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அகதிகளாக வாழும் ஆயிரக்கணக்கான காஷ்மீர் பண்டிதர்களில் சதீஷ் மகால்தார் ஒருவர்.

1990 ஆம் ஆண்டில், அவரது பெற்றோர் ஸ்ரீநகரிலிருந்து டெல்லிக்கு தப்பிச் செல்ல வேண்டியிருந்தபோது, அவர் ஒரு மாணவராக இருந்தார். சொந்த ஊரை விட்டு வெளியேறி ஒரு அகதியான நிலையை ஏற்றுக்கொள்வது அவரது தந்தைக்கு எளிதானதல்ல, மேலும் பலரைப் போலவே அவரும் மன அழுத்தத்தில் இருந்து விரைவில் காலமானார்.

சதீஷ் மஹல்தர் தொழில்முனைவோராகவும் மற்றும் நிதி ஆய்வாளராகவும் டில்லியில் பணியாற்றுகிறார். கடந்த ஆண்டு, ஸ்ரீநகரில் துல்லா முல்லா கிராமத்தில் உள்ள மாதா கிர் பவானி கோயிலுக்கு காஷ்மீரி பண்டிதர்கள் யாத்திரையை ஒருங்கிணைத்தார்.

அவர் ‘ஷோபா வாரியருக்கு’ அளித்த பேட்டியில், 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் காஷ்மீர் எவ்வாறு மாறும் என்பதைப் பற்றி பேசுகிறது.

kashmiripandit - 2025கடந்த ஆண்டு நாங்கள் பேசியபோது, ​​காஷ்மீரி பண்டிதர்களின் நிலை குறித்து அது ஒரு வெறும் அரசியல் பேச்சு மட்டுமே என்று நீங்கள் கூறியிருந்தீர்கள். இப்போது நரேந்திர மோடி அரசு 370 வது பிரிவை ரத்து செய்துள்ளது, உங்கள் உணர்வு என்ன?

நமது பிரதமரின் நம்பிக்கையையும் அர்ப்பணிப்பையும் நாங்கள் காண்கிறோம் மேலும் இந்த முடிவு காஷ்மீர் பண்டிதர்களின் மறுவாழ்வுக்கு வழிவகுக்கும். இது காஷ்மீர் பள்ளத்தாக்கை மீண்டும் பழைய மகிமைக்கு கொண்டு சென்று ஜம்மு-காஷ்மீரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும்.

ஜம்மு-காஷ்மீரில் சமாதானத்தை ஏற்படுத்தவும், எங்கள் எல்லைகளை மீட்டெடுக்கவும் நரேந்திர மோடிஜிக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இது சரியான தருணம் என்று நான் கூறுவேன்.

காஷ்மீரி பண்டிதர்களின் பார்வையில், முன்னோக்கி செல்லும் பாதை அவ்வளவு எளிதானது அல்ல, இது எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையினை கொடுத்துள்ளது.

kashmiri pandits1 - 2025மீண்டும் ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் மோடி அரசு இதைச் செய்யும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்களா?

காஷ்மீரி பண்டிதர்கள் 2014-2019 முதல் ஆட்சியில் இருந்தபோது இந்த விவகாரத்தில் எதையும் செய்யாததால் பாஜக மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகத் தோன்றியது.

370 வது பிரிவை அகற்றுவது பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இருந்ததால், அது எங்களுக்கு ஆச்சரியமாக இல்லை.

அரசியலமைப்பின் பிரிவு 370 மற்றும் பிரிவு 35 ஏ இரண்டையும் ரத்து செய்வதற்கான சரியான நேரம் இது என்று நான் நிச்சயமாக கூறுவேன், ஏனெனில் இது தேசத்தின் ஒருங்கிணைக்கும் திசையில் செல்கிறது.

370 வது பிரிவை நீக்குவது ஜம்மு-காஷ்மீரில் அமைதியையும், காஷ்மீர் இளைஞர்களுக்கான வேலைகளையும், காஷ்மீர் பண்டிதர்களுக்கு நீதியையும் தரும் என்று காங்கிரஸ் எம்.பி மிலிந்த் தியோரா ட்வீட் செய்துள்ளார். நீங்கள் எந்த வகையான மாற்றங்களை எதிர்பார்க்கிறீர்கள்

அவர் சொன்னதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். உள்ளூர் காஷ்மீரிகள் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் சொந்த மக்களால் பிரதான அரசியல் கட்சிகளால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளனர்.

370 ஐ ரத்து செய்வதன் மூலம், அதிகமான வேலைகள் காஷ்மீருக்கு வரும்.

kashmiri pandits - 2025இந்தியாவின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இப்போது காஷ்மீரில் முதலீடு செய்வதற்கான நம்பிக்கை இருக்கும் என்று நீங்கள் சொல்கிறீர்களா

நிச்சயமாக. இது காஷ்மீர் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்கும். இனிமேல், ஜே & கே இந்திய அரசின் கீழ் இருக்கும், மேலும் மத்திய அரசால் தொடங்கப்பட்ட பல தேசிய திட்டங்களும் அங்கு செயல்படுத்தப்படும்.

இருப்பினும், மோடி அரசாங்கம் ஒரு வரலாற்று தவறு என்று பலரும் விவரிக்கிறார்களே?

நான் ஒப்புக்கொள்ளவில்லை. தேசிய கண்ணோட்டத்தில், இது நமது எல்லைகளை பாதுகாப்பது மட்டுமல்லாமல் முழு ஆசியாவிலும் அமைதியைக் கொண்டுவருவதற்கான சரியான நடவடிக்கையாகும்.

ஜம்மு-காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்காகவும் நாடு துணை நிற்க வேண்டியது காலத்தின் தேவை. பாகிஸ்தான் இப்போது நல்ல நிலையில் இல்லாததால் இது சரியான நேரமாகும்.

ஆனால் சிலர் பாகிஸ்தான் ஊடுருவி பள்ளத்தாக்கில் ஆயுதங்களைக் கொண்டு வரும் என்று கூறுகிறார்கள், மேலும் வன்முறைகள் நடக்கும் என்று கூறுகிறார்களே

நான் ஒப்புக்கொள்ளவில்லை. பாகிஸ்தான் வேறு வழியில்லாமல் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வார்கள். காரணம், ஆப்கானிஸ்தான் மற்றும் தலிபான் பிரச்சினையை தீர்க்க அமெரிக்கா அவர்களுக்கு தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

எனவே, இப்போது, பாகிஸ்தானுக்கு ​​ஆப்கானிஸ்தானே முதன்மை பிரச்சினை மற்றும் காஷ்மீர் பாகிஸ்தானுக்கு இரண்டாம் நிலை மட்டுமே.

பாகிஸ்தான் இராஜதந்திர மற்றும் வெளிநாட்டு உறவுகளிலும் தோல்வியடைந்துள்ளது.

இம்ரான் கான் ஒரு எச்சரிக்கை தோணியில் மேலும் புல்வாமாக்கள் இருக்கும் என்று கூறிகிறாரே

அவர்கள் நிச்சயமாக எங்களைத் தொந்தரவு செய்ய முயற்சிப்பார்கள், ஆனால் அவர்களால் அதிகம் செய்ய முடியாது, ஏனெனில் அவர்களின் கைகள் டிரம்ப் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தால் வெட்டப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் பொருளாதாரம் ஒரு மோசமான வடிவம், அவர்கள் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை.

நரேந்திர மோடி சரியான நேரத்தில் இதைச் செய்தார் என்று நான் ஏன் சொன்னேன், ஏனெனில் பாகிஸ்தான் இப்போது பொருளாதார சிக்கலில் உள்ளது. மேலும், அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக அவர்கள் முதலில் தலிபான் மற்றும் ஆப்கானிஸ்தானில் கவனம் செலுத்த வேண்டும்.

மத்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி போன்ற அரசியல்வாதிகள் ஏன் கடுமையாக உள்ளனர் என்று நினைக்கிறீர்கள்

ஏனெனில் அவர்கள் காஷ்மீர் மக்களின் மனநிலையை அறிந்திருக்கிறார்கள். பிரதான அரசியல்வாதிகள் இந்த ஆண்டுகளில் அவர்களை ஏமாற்றி வருகிறார்கள் என்பதை மக்கள் அறிவார்கள்.

இந்த அரசியல்வாதிகள் காஷ்மீர் பிரச்சினையை உயிர்ப்புடன் வைத்து இருக்க ரும்புகிறார்கள், ஏனெனில் அது அவர்களின் பிழைப்புக்கான ஒரே வழி.

கடந்த 70 ஆண்டுகளில், மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படாதது ஏன்

ஏனெனில் இந்த அரசியல்வாதிகள் அரசையும் அதன் மக்களையும் வளர்ச்சியடையாமல் வைத்திருப்பதன் மூலம் பணம் சம்பாதித்து வந்தனர்.

லடாக் மக்கள் எப்போதுமே எப்படி ஏமாற்றப்பட்டனர் என்பதைப் பாருங்கள். லடாக் உள்ளிட்ட ஜே அன்ட் கே மையத்திலிருந்து நிதி ஒதுக்கீடு வந்த போதெல்லாம், எதுவும் அங்கு செல்லவில்லை. லடாக்கில் ஒரு உயர்கல்வி நிறுவனம் கூட இல்லை என்பதை அறிந்து நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள்.

facts kashmir - 2025காஷ்மீர் பண்டிதர்கள் அதிக எண்ணிக்கையில் பள்ளத்தாக்குக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா

நிச்சயமாக. ஆனால் காஷ்மீர் பண்டிதர்கள் திரும்பிச் செல்வதற்கு முன்பு நிறைய மறுசீரமைப்பு நடைபெற வேண்டும். சிறிது காலம் பிரச்சனை இருக்கலாம். எல்லாவற்றையும் தீர்த்துக்கொள்ள சிறிது காலம் ஆகும் என்று நான் நினைக்கிறேன்; அது எளிதாக இருக்காது. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், நிறைய காஷ்மீர் பண்டிதர்கள் தங்கள் நிலத்திற்கு திரும்பிச் செல்லப் போகிறார்கள்.

பள்ளத்தாக்கில் இயல்புநிலை திரும்புவதற்கு எவ்வளவு நேரம் நினைக்கிறீர்கள்

இயல்புநிலை விரைவில் திரும்பி வருவதை நான் காணவில்லை, இதற்கு குறைந்தது ஒரு வருடம் ஆகும். மகன்களை இழந்த, இந்த ஆண்டுகளில் அவர்களை ஏமாற்றிய மக்களின் மனதில் உள்ளூர் அரசியல்வாதிகள் மீது மிகுந்த கோபம் உள்ளது. இது குறைந்தது ஒரு வருடமாவது கொதிக்கும்.

கடைசியாக நாங்கள் பேசியபோது, ​​ஜம்மு-காஷ்மீரில் காஷ்மீர் பண்டிதர்களால் மட்டுமே அமைதியைக் கொண்டுவர முடியும் என்று நீங்கள் கூறியிருந்தீர்கள்…

நான் ஏன் சொன்னேன், பண்டிதர்கள் மற்றும் சீக்கியர்களின் வெளியேற்றத்துடன் மாநிலத்தில் மதச்சார்பின்மை காணவில்லை. இது 100% முஸ்லிம் நாடாக மாறியது. மக்கள்தொகையில் நாம் ஒரு சமநிலையை அடையும் வரை, அமைதி மீண்டும் வராது. பிரிவு 370 மற்றும் பிரிவு 35 ஏ ஆகியவற்றை அகற்றுவதன் மூலம், காஷ்மீர் பண்டிதர்கள் மற்றும் சீக்கியர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல அரசாங்கம் கதவுகளைத் திறந்துள்ளது.

காஷ்மீர் பண்டிதராக உங்கள் தனிப்பட்ட எண்ணங்கள் என்ன

கடந்த 29 ஆண்டுகளாக அகதிகளின் வாழ்க்கையை வாழ்ந்து வரும் காஷ்மீர் பண்டிதராக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

அதே நேரத்தில், என் மனதில் ஒரு கேள்வி உள்ளது, 6000 ஆண்டுகள் பழமையான காஷ்மீர் பண்டிதர்களின் அடையாளத்தை நாம் எவ்வாறு தக்க வைத்துக் கொள்ள முடியும்? இது எனது கவலைகளில் ஒன்றாகும்.

மூலம்: https://bdwntimes.com/

தமிழில்: ஸ்ரீனிவாசன் (Srini Vasan)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

Topics

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

நீதியரசர்களுக்கு மிரட்டல்; நீதித் துறையை இழிவுபடுத்தும் திமுக.,!

நீதியரசர்களுக்கு மிரட்டல் விடுக்கும் நோக்கமா? நீதித்துறையை இழிவுபடுத்தும் திமுக.,வை இந்துமுன்னணி வன்மையாகக்...

பஞ்சாங்கம் டிச.11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நீதிபதியுடன் அரசியல் செய்து, திமுக., தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளது!

ஜாதி மத பேதமற்ற ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றவர்கள்,நீதிபதி மீது...

Entertainment News

Popular Categories