ஒரே வகுப்பு மாணவனோடு காதல்.. குழந்தை பெற்ற மாணவி! சிறுவன் கைது!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
baby
baby

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள கிராமத்தில் 17வயது பிளஸ் 2 மாணவி ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த மாணவிக்கு, சக மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது இருவரும் இடையே காதல் உண்டானதாக கூறப்படுகிறது. இதனால் நெருங்கி பழகி வந்த இருவரும், அவ்வப்போது தனிமையில் உறவில் இருந்துள்ளனர்.

இதனால் சிறுமி கர்ப்பமடைந்தார். இந்நிலையில் சிறுமியின் மூத்த சகோதரி பிரசவத்திற்காக திருப்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தார்.
அவருடன் உதவிக்கு வந்த சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.

தொடர்ந்து அதே மருத்துவமனையில் அவருக்கு ஸ்கேன் எடுத்த பார்த்தனர். அப்போது தான் சிறுமி கர்ப்பமாக இருப்பது குடும்பத்தினருக்கு தெரியவந்தது.

மேலும் சிறுமியின் உடல்நிலை மோசமாக இருந்ததால் பிரசவம் பார்க்குமாறு அவரது தந்தை மருத்துவரிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து கடந்த மாதம் 19ஆம் தேதி சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதே மருத்துவமனையில் செல்வி என்பவர் நர்ஸாக வேலை பார்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் பாகம் பிரியாள் என்பவருக்கு குழந்தை இல்லை.

ALSO READ:  இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!

எனவே செல்வி, சிறுமியின் தந்தையிடம் கூறி, குழந்தையை வாங்கி பாகம்பிரியாளிடம் வழங்கினார். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சைமன் ஜார்ஜ், திருப்புத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

மேலும், சிறுமியின் தந்தை, பிரசவம் பார்த்த மருத்துவர், சிறுமியின் அத்தை, நர்ஸ் செல்வி, குழந்தையை வாங்கிய பாகம்பிரியாள் (40) ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தார்.

இதில் 17 வயது சிறுவன், சிறுமியின் தந்தை ஆறுமுகம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள மருத்துவர் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.