போலீஸின் மூக்கை கடித்த இராணுவ வீரர்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
manimaran - 2026

மதுரை வாடிப்பட்டி அருகே நிலத்தகராறு குறித்து விசாரணைக்கு சென்ற போலீசாரின் மூக்கை கடித்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

மதுரைமாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (30) அவரது வீட்டின் அருகில் குடியிருந்து வருபவர் நவநீத கிருஷ்ணன் (37) இராணுவவீரர்.

இவர்கள் இருவருக்கும் இடப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நவநீதகிருஷ்ணன் குடிபோதையில் பிரகாஷிடம் தகராறு செய்து கொண்டிருந்தார்.

உடனே அவர் மதுரை காவல் கட்டுப்பாட்டு அறை 100க்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த வாடிப்பட்டி போலீஸ் ஏட்டுகள் மணி மாறன், ராஜேந்திரன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ஆத்திரமடைந்த நவநீதகிருஷ்ணன் விசாரணை செய்ய வந்த ஏட்டு மணிமாறனை தாக்கினார், தொடர்ந்து சண்டையிட்டு அவரது மூக்கை கடித்து துண்டாக்கினார்.
உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் விலக்கி விட்டனர். இதில் ஏட்டு மணிமாறன் பலத்த காயமடைந்தார்.

mani maran1 - 2026

வாடிப்பட்டி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின் அவரை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த வாடிப்பட்டி போலீசார் ராணுவ வீரர் நவநீதகிருஷ்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.