child 3
child 3

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வியாபாரியை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர்.

வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு, 16 வயது சிறுமியின் பெற்றோர் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், 16 வயது மகள், வீட்டின் கீழ் தளத்தில் உள்ள தோசை மாவு கடைக்கு சென்றபோது, வியாபாரி பாண்டியன், 60 என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதனால், சிறுமி மன உளைச்சலில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், நேற்று அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending