தோட்டத்தில் சாராயம் காய்ச்சிய மூவர் கைது!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
madhu1 - 2026

தோட்டத்தில் வைத்து சாராயம் காய்ச்சிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் விவசாய தோட்டத்தில் வைத்து சாராயம் காய்ச்ச படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு சாராயம் காய்ச்சுவதற்கு வைத்திருந்த ஊறல்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் அங்கிருந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் மின்னவேட்டுவன் பாளையத்தில் வசித்துவரும் தாமரைச்செல்வன், நேரு, முருகேசன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த சுமார் 60 லிட்டர் சாராய ஊறல்களையும், சாராயம் காய்ச்சுவதற்கு வைத்திருந்த கேஸ் சிலிண்டர், மண்பானை மற்றும் பாத்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.