ஏடிஎம்: கூட்டாக கொள்ளை! அடுக்கடுக்காய் வெளியாகும் அதிர்ச்சி தகவல்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
atm Robbery - 2026

ஏடிஎம் கொள்ளையில், தொடர்புடைய மூன்றாவது நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொள்ளை சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அரியானா மாநிலத்தைச் சேர்ந்த அமீர் அர்ஷ் மற்றும் அவனது கூட்டாளி வீரேந்திர ராவத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த கொள்ளையில் தொடர்புடைய மூன்றாவது நபர் நசீம் உசேன் என்பவனை அரியானாவில் போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

இதற்கிடையே, கொள்ளைச் சம்பவத்தின் பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரியானா மாநிலம் மேவாட் மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமங்களை சேர்ந்த இரண்டு கொள்ளை கும்பல்கள் இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளன.

இரண்டு குழுக்களிலும் தலா 15 கொள்ளையர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். நாடு முழுவதும் ஜீப்பில் பயணம் செய்து இந்த கொள்ளை கும்பல் நோட்டம் விட்டு கைவரிசையை காட்டி வந்துள்ளது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

மேலும் லாரிகள் மற்றும் விமானம் மூலமும் பயணம் செய்துள்ளனர். பேருந்து ரயில் பயணங்களை தவிர்த்து வந்துள்ளனர்.

இந்த கும்பல் பயன்படுத்தி ஜீப்பை பறிமுதல் செய்துள்ள போலீசார், அதனை சென்னைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.