கொரோனா: இளம் நடிகை தொடர்ந்து கவலைக்கிடம்!

Published:

charnya 1 - 2026

கொரோனா பாதிக்கப்பட்ட இளம் நடிகை சரண்யா சசியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

மலையாளத்தில் பல படங்களில் நடித்து பிரபலமானவர், சரண்யா சசி. இவர் தமிழில் ‘பச்சை என்கிற காத்து’ என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இதனிடையே சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டது. ஒருமுறை படப்பிடிப்பில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்த அவருக்கு மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு 11 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.

charnya - 2026

அதன்பிறகு அவரின் உடல்நிலை படிப்படியாக தேறிய நிலையில் கடந்த மே 23ம் தேதி சரண்யா சசிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இதனையடுத்து திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

Related articles

Recent articles

spot_img