murder
murder

மனைவியை உறவுக்கு அழைத்து வர மறுத்ததால் கழுத்தை நெறித்து கொலை செய்ததாக 2வது கணவர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் பாண்டியராஜன்(37). ஓட்டல் புரோட்டா மாஸ்டர். இவர் மனைவி மல்லிகா(35). கூலித்தொழிலாளி. கடந்த 10ம் தேதி ஆடைகள் கலைந்து அரை நிர்வாண நிலையில் அழுகிய நிலையில் மல்லிகா உயிரிழந்து கிடந்தார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மல்லிகாவிற்கு 18 ஆண்டிற்கு முன் வேறு ஒருவருடன் திருமணம் நடத்தது. ஒரு மகன், மகள் உள்ளனர். உறவினர்கள் வீட்டில் வளர்ந்து வருகின்றனர்.

இரு குழந்தைகள் பிறந்த பின்னர் மல்லிகா முதல் கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்.

இதனையடுத்து, பொள்ளாச்சி வடக்கிபாளையத்தில் 5 ஆண்டிற்கு முன் வசித்து வந்தபோது ஓட்டலில் வேலை செய்த பாண்டியராஜனுடன் தொடர்பு ஏற்பட்டது.

சில மாதங்களுக்கு முன் பாண்டியராஜன் தொண்டாமுத்தூர் அழைத்து வந்து கோயிலில் தாலி கட்டினார். கடந்த 8ம் தேதி இரவு கணவர், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதில் மனைவியை தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்த பாண்டியராஜன் தலைமறைவாகிவிட்டார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்! 

இதனையடுத்து, தனிப்படை அமைத்து போலீசார் பாண்டியராஜனை சொந்த ஊரில் வைத்து கைது செய்தனர். பின்னர், கோவை அழைத்து வந்து விசாரித்தபோது மல்லிகாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து, போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில்;- மல்லிகாவை நான் உறவுக்கு அழைத்தபோது உன்னால முடியாது. உனக்கு ஆண்மை போயிருச்சு பேசாம படுத்து தூங்கு என கேவலமாக பேசியதால் கழுத்தை நெரித்தேன்.

அவர் மயங்கிவிட்டார். இதனையடுத்து, அவர் இறந்தது கூட தெரியாமல் உறவு கொண்டேன். காலையில் தூங்கி எழுந்து பார்த்த போது இறந்துவிட்டது தெரியவந்தது.

நான் ஆட்டோவில் உக்கடம் சென்று சொந்த ஊருக்கு பேருந்து ஏறி சென்றுவிட்டேன் என கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending