vankodumai 1 - 2026

திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேர்ந்த 43 வயதான பெண் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் விவாகரத்து பெறுவதற்காக அவர் திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு சென்று வழக்கறிஞர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது மணவாள நகர் பெரியார் தெருவைச் சேர்ந்த வழக்கறிஞர் டார்ஜன் என்பவரை அணுகியுள்ளார். டார்ஜன் அப்பெண்ணிடம் இந்த வழக்கை நானே எடுத்து நடத்துகிறேன் என்று கூறி, வழக்கு தொடர்பான ஆவணங்களை வீட்டுக்கு வந்து வாங்கி கொள்வதாக கூறி அந்த பெண் வீட்டுக்கு சென்றார்.

பின்னர் மறுநாள் அந்தப் பெண் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார். அப்போது டார்ஜன் தான் வாங்கி சென்ற குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கலந்து அதை அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார்.

குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்தில் அந்த பெண் மயங்கினார். மயங்கி கீழே விழுந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்திருக்கிறார் டார்ஜன். பின்னர் அந்த பெண்ணிடம் பாலியல் உறவில் இருந்துள்ளார்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மயக்கம் தெளிந்த பெண் விழித்து பார்த்தபோது தனது ஆடை களைந்து நிர்வாணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். கணவரிடம் இருந்து விடுதலை பெற வேண்டும் என நினைத்து வழக்கறிஞரிடம் இப்படி சீரழிந்து விட்டோமே என்று நினைத்து அழுதுள்ளார்.

அந்த நேரத்தில் டார்ஜன் அப்பெண்ணிற்கு போன் செய்து மூன்று லட்சம் பணம் உடனே தர வேண்டும் இல்லையென்றால் உன் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.

அவ்வாறு மிரட்டி ரூ.7 லட்சம் வரை பெற்றுள்ளார். மேலும் பணம் கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். வக்கீல் டார்ஜனுக்கு ஆதரவாக அவரது மனைவியும் சேர்ந்து அந்த பெண்ணை மிரட்டியுள்ளார்.

இதனால் பதறிப்போன அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதனையறிந்த வழக்கறிஞர் டார்ஜன் தலைமறைவாகிய நிலையில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். பின்னர் கொடைக்கானலில் பதுங்கியிருந்த டார்ஜனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending