காதலனனுடன் உறவு.. காதலனை மிரட்டி துரத்தி விட்டு இருவர் பாலியல் வன்கொடுமை!

Published:

vankodumai - 2026

அரூர் அருகே சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய 2 இளைஞர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாவக்கல் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார்(25). இவர் தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த உறவினரின் 14 வயது மகளை காதலிப்பதாக கூறி, கடந்த சில நாட்களுக்கு தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அப்போது அங்கு வந்த பெத்தூர் கிராமத்தை சேர்ந்த விஜய்(26), தியாகு(36) ஆகியோர், அஜித்குமாரை தாக்கி அங்கிருந்து விரட்டி உள்ளனர்.

பின்னர், விஜய், சிறுமியை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், அதனை தியாகு தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

பின்னர் சிறுமியை விடுவித்த அவர்கள், இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். வீட்டிற்கு சென்ற சிறுமி தனக்கு நடந்த கொடுமையை, பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். மேலும், இதனால் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

அவரை மீட்ட பெற்றோர், இதுகுறித்து அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில், மகளிர் போலீசார் விஜய், தியாகு ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்த செல்போனையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து, தப்பியோடிய உறவினர் அஜித்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img