போலீஸாருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை; கட்டாய வார ஓய்வு: டிஜிபி சுற்றறிக்கை!

Published:

tnpolice
tnpolice

போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளித்து, கட்டாய ஓய்வு ஒரு நாள் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறை தலைமை இயக்குனர் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது…

  • போலீஸார் தங்களது உடலை பேணிக்காக்க ஏதுவாகவும், தங்கள் குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடவும் வாரத்தில் ஒருநாள் கட்டாய ஓய்வு அளிக்கப்பட வேண்டும்.
  • வார ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் போலீஸார், ஓய்வு நாளன்று பணியில் இருந்தால், மிகைநேர ஊதியம் வழங்க வேண்டும்.
  • காவல் ஆளிநர்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் போன்ற விஷேச நாட்களில் அவர்களது குடும்பத்தாருடன் கொண்டாட வசதியாக அந்தந்த நாட்களில் விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

*தமிழக காவல்துறை சார்பாக பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்து செய்தி மாவட்ட / மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் வானொலி மூலமாக சம்பந்தப்பட்ட ஆளிநர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

மேற்கண்ட அறிவுரைகளை அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப் பாளர்களும் தவறாமல் செயல்படுத்த கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்… – என்று, அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

police annct
தமிழகத்தில் காவலர்களின் பிறந்தநாள் மற்றும் திருமண நாள் அன்று விடுமுறை அளிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு மேலும் வார விடுமுறை அளிக்கவும் உத்தரவு

Related articles

Recent articles

spot_img