kebharial
kebharial

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மாதா கோவில் துடரி பேட்டை பகுதியை சேர்ந்தவர் செபஸ்டியன் மகன் கேபரியல்.

17 வயதான இவர் அப்பகுதியில் தெருவில் விளையாடிய நான்கு வயது சிறுமியிடம் விளையாட்டு காட்டி, சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதனையடுத்து வீட்டிற்கு சென்ற சிறுமியிடம் மாற்றம் தென்பட்டது. இதனை கண்ட பெற்றோர்கள் இதுகுறித்து சிறுமிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது கேப்ரியல் சிறுமியிடம் தவறாக நடந்துக்கொண்ட விபரங்களை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட சீர்காழி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் கேபரியலை கைது செய்து சீறார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவன் என்பதால் அவனை சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

மேலும் அந்த நான்கு வயது சிறுமிக்கு மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் மூலம் கவுன்சிலிங் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending