Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeகிரைம் நியூஸ்நடுரோட்டில் குடித்து விட்டு மனைவியை அடித்து கொடுமை!

நடுரோட்டில் குடித்து விட்டு மனைவியை அடித்து கொடுமை!

- Advertisement -
- Advertisement -
husband
husband

நடு ரோட்டில் கணவர் ஒருவர் தனது மனைவிக்கு செய்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள சாலை ஒன்றில் குடித்து விட்டு தனது மனைவியுடன் நடந்து சென்றுள்ளார்.

அப்போது திடீரென அவரது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற அந்த இளைஞர் அவரது மனைவியின் கன்னத்தில் அறைந்து மனைவியின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்துள்ளார்.

இதற்கு பிறகும் ஆத்திரம் அடங்காத அவர், நடு ரோட்டில் அத்தனை பேர் முன்பு மனைவியின் கழுத்தில் கிடந்த தாலி கயிற்றை அறுத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

இதை அந்த வழியாக மொபட்டில் வந்த பெண் போலீஸ் ஒருவர், இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், அவர்கள் 2 பேரும் திருச்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது.

இதையடுத்து இளைஞரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்ல அவர் முயன்ற போது, அந்த பெண், தனது கணவரை விட்டுவிடுமாறு கெஞ்சினார்.

இதையடுத்து அந்த பெண் போலீஸ், அந்த இளைஞரை விட்டுவிட்டு சென்று விட்டார். இதனை தொடர்ந்து 2 பேரும் திருச்சி மார்க்கமாக சென்ற ஒரு பஸ்சில் ஏறி சென்றனர்.

நடுரோட்டில் மனைவியை தாக்கி, தாலி கயிற்றை அறுத்த சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

- Advertisement -