Ariyalur
Ariyalur

அரியலூர் அருகே 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த 4 இளைஞர்கள், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள நாகமங்கலத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் கடந்த 12ஆம் தேதி கிராமத்தில் உள்ள தோட்டத்திற்கு ஆடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் (33) என்பவர், சிறுமியை கட்டயாப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அவரது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, அவர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், மகளிர் போலீசார் ரஞ்சித் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

மேலும், சிறுமியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவரை அதே பகுதியை சேர்ந்த ரமேஷ், சத்யராஜ் உள்ளிட்ட 3 இளைஞர்கள் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, அவர்கள் மூவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending