கனமழை நிலச்சரிவு: சென்னை கொல்லம் ரயில் பகுதி ரத்து!

சற்றுமுன் நெல்லை பொது தகவல்கள்
train new
train new

கேரள மாநிலத்தில் பலத்த மழை காரணமாக செங்கோட்டை – புனலூர் ரயில்வே பிரிவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கீழ்க்காணும் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இன்று (17.10.2021) சென்னையில் இருந்து புறப்படும் வண்டி எண் 06101 சென்னை எழும்பூர் கொல்லம் சிறப்பு ரயில், நாளை (18.10.2021) கொல்லத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06102 கொல்லம் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஆகியவை செங்கோட்டை – கொல்லம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும் இன்று (17.10.2021) பாலக்காட்டில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06792 பாலக்காடு – திருநெல்வேலி பாலருவி சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 06791 திருநெல்வேலி – பாலக்காடு பாலருவி சிறப்பு ரயில் ஆகியவை திருநெல்வேலி – புனலூர் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.