spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?நயன்தாராவுக்கு மரத்தோடு திருமணம்..?

நயன்தாராவுக்கு மரத்தோடு திருமணம்..?

- Advertisement -
nayan2
nayan2

காதலரை கணவனாக கரம் பிடிக்க நயன்தாரா மரத்தை கல்யாணம் செய்ய போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது

தமிழக மற்றும் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா – பிரபல டைரக்டர் விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணம் விரைவில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்பட துவங்கி உள்ளன.

தமிழ் சினிமா துறையில் பல வருடங்களாக முன்னணி நடிகையாகவே வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நிலையில், இவர்களது திருமணம் தொடர்பான தகவல்கள் அவ்வப்போது வெளிவருவது வழக்கமாக இருந்து வருகிறது.

இதனிடையே வெளியாகி இருக்கும் லேட்டஸ்ட் தகவல்கள், இருவரும் திருமண வாழ்வை நோக்கி அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதை வெளிப்படுத்துகிறது.

nayandara
nayandara

ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டுள்ள நயன்தாராவின் திருமணம் தொடர்பான அனைத்து செய்திகளையும் அவரது ரசிகர்களை மிகவும் ஆர்வத்துடன் பின்தொடர்ந்து வரும் நிலையில், அவர்களுக்கு தற்போது வித்தியாசமான ஒரு தகவல் கிடைத்து இருக்கிறது.

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு, முதலில் ஒரு மரத்தை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

2015-ஆம் ஆண்டில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடி தான் படத்தில் காது கேட்காத ஹீரோயினாக நடித்து நடிப்பில் மற்றொரு பரிமாணத்தை காட்டி அசத்தி இருந்தார் நயன்தாரா.

nayanthara vigneshsivan
nayanthara vigneshsivan

இந்த படத்தில் நடித்த போது தான் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவிற்கும் காதல் மலர்ந்தது. சுமார் 6 ஆண்டுகளுக்கும் மேலாக காதல் உறவில் இருக்கும் இந்த ஜோடி அடிக்கடி வெளிநாடுகள் மற்றும் வித்தியாசமான இடங்களுக்கு டேட்டிங் சென்று அங்கே உற்சாகமாக பொழுதை கழிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

இந்த ஆண்டு துவக்கத்தில் இருவருக்கும் ரகசிய நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறப்படும் நிலையில் எப்போது தான் திருமணம் செய்து கொள்வார்களோ என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில் இருவருக்கும் திருமண தேதி குறிக்கப்பட்டு விட்டதாகவும், ஆனால் அதற்கு முன் சில சடங்கு சம்பிரதாயங்களை செய்ய மத பெரியோர்கள் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகை நயன்தாராவிற்கு செவ்வாய் தோஷம் இருப்பதாகவும், இதனால் அவர் நேரடியாக விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்ள கூடாது என்று இந்து ஜோதிட மரபுகளின்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால் செவ்வாய் தோஷம் நீங்க விக்னேஷை திருமணம் செய்து கொள்ளும் முன்பு, ஒரு மரத்தை நடிகை நயன், திருமணம் செய்து கொள்வார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

nayanvignesh
nayanvignesh

இதே தோஷத்திற்காக அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொள்ளும் முன் வாரணாசி, பெங்களூர் மற்றும் அயோத்தி உட்பட மூன்று வெவ்வேறு நகரங்களில் 3 வெவ்வேறு மரங்களை நடிகை ஐஸ்வர்யா ராய் திருமணம் செய்து கொண்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்து மதத்தில் உறுதியான நம்பிக்கையுள்ளவராக நயன்தாரா மாறிவிட்டதாக பலர் கூறி வரும் நிலையில், காதலரை கணவனாக கரம் பிடிக்க நயன்தாரா மரத்தை கல்யாணம் செய்ய போவதாக தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த பரிகாரத்திற்கு பிறகு விரைவில் இந்த காதல் ஜோடியின் திருமணம் திருமலையில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், சென்னை ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,173FansLike
387FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,897FollowersFollow
17,300SubscribersSubscribe