thennarasi
thennarasi

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் கச்சைகட்டி பெருமாள்கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாரதிதாசன். இவரது மகள் தென்னரசி அங்குள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் மாணவி தென்னரசி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ” கொரோனா வைரஸ் நோயிலிருந்து மக்களை பாராட்டி வரும் தங்களை உலக சுகாதார அமைப்பு பாராட்டி வருகிறது. தமிழகத்தில் கொரோனா வார்டில் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இதனால் இரவும் பகலும் பாடுபடும் மருத்துவர்கள் மனவேதனையில் உள்ளனர். எனது தந்தை சிறு குறு விவசாயி. எங்களுக்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் கொரோனா சிகிச்சைக்கு பணிபுரிந்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், ஊடகத்துறையினர், துப்புரவு பணியாளர்கள் யாராவது நோய் தொற்று ஏற்பட்டு மரணமடைந்தால் அவர்களின் உடலை எங்கள் நிலத்தில் அடக்கம் செய்ய எனது தந்தை, தாயாரின் ஒப்புதலின்பேரில் சம்மதம் தெரிவித்து பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்” என்று அதில் தெரிவித்துள்ளார். இதனால் பல்வேறு தரப்பினரும் அந்த மாணவியை பாராட்டி வருகின்றனர்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

சமீபத்தில் சைமன் ஹெர்குலஸ் எனும் மருத்துவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியான நிலையில் அவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதின் எதிரொலியாக பலரும் தங்கள் நிலத்தை அளிக்க முன்வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending